10-11-2004, 02:34 PM
<b>வெலிக்கந்தையில் கருணா கும்பலைச் சேர்ந்த இருவர் சுட்டுக் கொலை, நால்வர் காயம் </b>
பொலன்னறுவை மாவட்டம் வெலிக்கந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை கருணா கும்பலின் மறைவிடமொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் நால்வர் படுகாயங்களுடன் வைத்தியசாiயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
வெலிக்கந்த பிரதேசத்திலுள்ள நாகஸ்தன்ன கிராமத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் தங்கியிருந்த சமயம் இத்தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவருடன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மூலமும், கிரனைட் மூலமும் அந்நபர் இத்தாக்குதலை நடத்தியிருக்கின்றார் என வெலி;கந்த பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் இடம் பெற்ற இடத்தில் குறிப்பிட்ட தொகை ஆயுதமும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. படுகாயமடைந்தவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பொலன்னறுவை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி புதினம்..!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>