07-23-2003, 08:37 AM
kuruvikal Wrote:உங்களுக்கு ஜேர்மனியில் அவர்களைப் போல் சுதந்திரம் வேண்டுமானால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்....அவற்றால் வரும் விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானால் சரி...எமக்கென்ன நட்டமா....ஆனால் பெண் விடுதலை என மேற்குல கீழ்மைகள் எமது சமூகத்துள் திணிக்கப்பட ஒரு போதும் நாம் அனுமதிக்க முடியாது...!
<b>யேர்மனியில் அவர்களைப் போலச் சுதந்திரம்... </b>
என்று உங்கள் இயலாமையை யேர்மனியர் மீதும் ஐரோப்பியர் மீதும் திணிக்கப் பார்ப்பதும் கூச்சலிடுவதும் உங்களுக்கு அழகாய் இருக்கலாம்.
நாம் வேண்டும் பெண் விடுதலை என்பது யாரையும் சார்ந்ததல்ல.
மனிதத்தின் மீதான சுதந்திரம்.
பெண்களின் சுயத்தைப் பறிக்க நினைக்கும்
சமுதாயத்தின் போலித் தடைகளைத் தகர்த்தெறியும் பிரயத்தனம்.......
இன்னும்
நான் ஆண் என்று திமிர் கொள்ளும்......
ஆண்தான் தலைமை என்று கூக்குரலிடும்...
உங்கள் போன்றோரால் இதை ஜீரணிக்க முடியாதுதான்.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa

