07-23-2003, 04:44 AM
sOliyAn Wrote::wink: முன்பு மாதவிலக்கு நாட்களில் பெண்களை தனியாகவிடுவார்கள்.. சில இடங்களில் கரிக்கோடுமகூட போட்டிருப்பார்கள்.. தற்போது அவ்வாறு எதுவுமே இல்லை.. இதுதான் மனித இனத்துள் புதுப்புது நோய்கள் புகுந்து மனித ஆயுள் குறையக் காரணமோ? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen:
சோழியான்
மாதவிலக்கு என்பது ஒரு நோயல்ல.
ஆதிகாலத்தில் - அந்த நேரத்தில்
விலங்குகளிடமிருந்து பெண்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவர்களிடம் முன்னர் ஒரு பெரிய இரும்பைக் கொடுத்து வைத்தார்கள்.
இங்கே இரும்பு ஒரு தற்காப்பு ஆயுதமாகவே இருந்தது.
சில இடங்களில் உலக்கையையும் கொடுத்தார்கள்.
மாதவிலக்கான பெண்களைத் தேடி வரும் தொலைவில் இன்று விலங்குகளே இல்லை.
ஆனாலும் ஏன் எதற்கு என்ற சிந்தனைகள் எதுவுமின்றி முன்னோர்கள் மாதவிலக்கானவளிடம் இரும்பு கொடுத்தார்கள் என்பதற்காக தொடர்ந்தவர்களும் கொடுத்தார்கள்.
இதை மூடநம்பிக்கை சம்பிரதாயம்... போன்ற விடயங்களுக்குள் அடக்கலாம்.
மாதவிலக்கு ஒரு சாதாரண விடயம்.
கருத்தரிப்பதற்குத் தயாரான பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் சூல்முட்டைகள்தான் அவை.
இதன் போது பெண்ணுக்கு உடலில் சில உபாதைகள் தோன்றுகின்றன. சில ஹோர்மோன்களின் மாற்றங்களால் மனதிலும் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன.
இயல்பான இந்த மாற்றங்களை விட
மாதவிலக்கு என்பது ஒரு நோய் என்பது போல கையாளும் மனிதர்களால்தான் கூடுதலான உளவியல் பிரச்சனைகள் பெண்களுக்கு ஏற்படுகின்றன.
இதன் தாக்கம் முழுக்க முழுக்கப் பெண்ணுக்கே. இவை பற்றி எழுதுவதாயின் வேறு ஒரு தலைப்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
மாதவிலக்கு என்பது ஒரு நோயல்ல.
மாதவிலக்கான பெண் எல்லோருடனும் சேர்ந்திருக்கும் போது இவளை மோப்பம் பிடித்து வரும் விலங்களால் ஒட்டு மொத்த சமூகத்துக்கே வில்லங்கம் வந்து விடும் என்பதை கருத்தில் கொண்டு இவளைச் சற்றுத் தள்ளித் தனியாக இருக்க விட்டார்கள்.
ஆபத்து வந்தாலும் அவளோடு மட்டும் போய் விடட்டுமென்று.
இதுவே காலப்போக்கில் மாதவிலக்கு என்ற பெயர் கொண்டு விட்டது.
Nadpudan
Chandravathanaa
Chandravathanaa


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: :mrgreen: