Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாட்டியில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய
#1
<b>சாட்டியில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய
சுடுமண் கிணறு கண்டுபிடிக்கப்பட்டது
பல்கலைக்கழகக் குழுவின் ஆயு;வுமூலம் வரலாற்றுச் சான்றுகள்</b>

சாட்டியில் தொடர்ச்சியாகத் தொல்லியல் அகல் ஆய்வை மேற்கொண்டுவரும் கலாநிதி ப.பு~;பரட்ணம் தலைமையிலான பல்கலைக் கழகத் தொல்லியல் கற்கைநெறி மாணவர்கள் குழு 2000 வருடங்களுக்கு முற்பட்டதென்பதை நிச்சயப்படுத்தக்கூடிய சுடுமண்ணால் செய்யப் பட்ட மிகப்பெரிய கிணறு ஒன்றை 20 அடி ஆழம் கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுக் குழியிலிருந்து மீட்டு எடுத்துள்ளனர். இக்கிணறு மீட்கப்பட்டபோது அதன் வடிவமைப்பையும் தொழில்நுட்பத்திறனையும் நேரில் பார்வையிட்ட அவ்வூர் பொதுமக்கள் இவ்வளவு நாகரிகம் படைத்த மக்கள் முன்னொரு காலத்தில் எமது பிரதேசத்தில் வாழ்ந்தார்கள் என்பதை அறியும் போது தமக்குப் பெருமையாகவும், ஆச்சரியமாக வும் இருப்பதாகக் கூறினார்கள்.
இக்கிணறு அமைக்கப்பட்டதன் நோக்கம், அதன் காலம் தொடர்பாகக் கலாநிதி பு~;பரட் ணத்திடம் எமது செய்தியாளர் கேட்டபோது, இக்கிணறு கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் மையத்தில்தான் முதன்முதலில் இயற்கையான பாறையில் வட்டமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் அமைக்கப்பட்ட தாழியடக்க ஈமச் சின்னத்தைக் கண்டுபிடித்தோம். ஆனால், இம் மேடையைச் சுற்றி பரந்த அளவில் செயற்கை யான வடிவம் கொண்ட பாறைத்தொடர்களும், மட்பாண்ட ஓடுகளும் காணப்பட்டதால் கடந்த மூன்று நாள்களாக அவ்விடத்தில் தொடர்ந் தும் அகழ்வை மேற்கொண்டு வந்தோம். அப் போது முன்பு தாழியடக்க ஈமச்சின்னம் காணப் பட்ட மேடைக்கு வடக்கே மிகச்சிறிய இடை வெளியில் இரண்டு அடிவிட்டமுடைய இன்னொரு குழியடக்க ஈமச்சின்னம் இருந்ததைக் கண்டு பிடித்தோம். அக்குழியடக்க ஈமச்சின்னம் (Pit Burial) இயற்கையான பாறையை வெட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அக்குழி செயற்கை யாக வடிவமைக்கப்பட்ட கற்களைக் கொண்டு வட்டவடிவில் மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்தது. இந்த ஆய்வின் போது ஐந்தடி ஆழத்தில் இரு கற்படுக்கைகளுக்கிடையே பலவகை எலும்புக் கூடுகளையும் மட்பாண்டங் களையும் கண்டுபிடித்திருந்தோம். இதிலிருந்து இவ்விடம் ஒரு குடும்பத்தின் அல்லது குறிப் பிட்ட ஒரு சமூகத்தின் ஈமச்சின்னங்களாக இருந்துள்ளதை உறுதிப்படுத்த முடிகின்றது. இவ்வாறான ஈமச்சின்னங்கள் தமிழகத்தில் பல இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், இங்கிருந்த ஈமச்சின்னத்திற்குக் கீழே இயற்கை மண்ணை அடையாளம் காண் பதற்காகத் தொடர்ந்து அகழ்ந்த போதுதான் சுடுமண்ணால் செய்யப்பட்ட கிணறு ஒன்று இருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். பொது வாக இற்றைக்கு 2 ஆயிரத்து 800 ஆண்டுக ளுக்கு முன்பிருந்து தென்னிந்தியாவிலும், இலங் கையிலும் வாழ்ந்த பெருங்கற்காலத் திராவிட மக்கள் தாம் வாழ்ந்த மணற்பாங்கான இடங் களில் நீரை எடுப்பதற்காக அமைக்கப்பட்ட கிணறுகள் மழை, காற்று போன்ற காரணங் களால் து}ர்ந்து போகாதிருக்க அக்கிணறுக ளைச் சுற்றி சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைத்திருந்திருந்தனர். இதற்கு தமிழகத்தில் வசவ சமுத்திரம், அதிரம்பாக் கம், வடஇலங்கையில் கிராஞ்சி போன்ற இடங் களில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் சிறந்த சான்றுகளாகும். ஆனால், சாட்டியில் ஈமச்சின்னத்திற்குக் கீழே இச்சுடுமண் கிணறு காணப்பட்டமை பெருங்கற்காலப்பண்பாட்டு மக்களது வாழ்க்கை முறைக்கு முரண்பாடா கத் தெரிகின்றது. இதற்கு முன்பொரு காலத் தில் சுடுமண்ணால் வடிவமைக்கப்பட்ட கிணறு இருந்த இடம் பின்னர் ஏதோ ஒரு காரணத்தி னால் கைவிடப்பட்டபோது அவ்விடம் பிற் காலத்தில் ஈமச்சின்னங்கள் அமைக்கும் மைய மாக மாறியிருக்க வேண்டும். இதையே சாட்டி அகழ்வாய்வில் கிடைத்த சான்றுகள் உறுதிப ;படுத்தலாம்.
சாட்டியில் கண்டுபிடித்த சுடுமண் கிணறு ஏறத்தாழ 20 அடி ஆழத்தில் இருந்து மீட்கப் பட்டது. இது ஐந்து சுடுமண் வளையங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட நான்கடி உயரமான கிணறாகும். இச்சுடுமண் வளையங்கள் ஒவ் வொன்றும் ஒன்றரையடி விட்டமும், இரண்டடித் தடிப்பும் ஓர் அடி உயரமும் கொண்டவை. இது போன்ற கிணறு ஒன்றை 1991 ஆம் ஆண்டு பூநகரியில் கிராஞ்சி என்ற இடத்தில் கண்டு பிடித்திருந்தோம். அது காபன்காலக் கணிப்பின் படி இற்றைக்கு 2 ஆயிரத்து 800 ஆண்டுக ளுக்கு முற்பட்டதென உறுதிப்படுத்தப்பட்டிருப் பதால் அதன் காலத்துடன் சாட்டியில் கிடைத்த சுடுமண்கிணற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
சாட்டியில் நீரும் சேறும் நிறைந்த பகுதி யில் நான்கு மண்வளையங்களை பல சிரமத் தின் மத்தியில் மீட்டெடுத்த நாம் அடியில் இருந்த இன்னொரு மண்வளையத்தை முழு மையாக எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது சுற்றிவர இருந்த பாறைகள் இடிந்து வீழ்ந்து, அதில் மூன்று மாணவர்கள் காயமடைந்ததால் எமது இறுதி முயற்சியைத் தற்காலிகமாக இடை நிறுத்த வேண்டியேற்பட்டுள்ளது. ஆயினும், ஏனைய இடங்களில் தொடர்ந்தும் அகழ்வாய் வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாய் வுகள் நடைபெறும் இடங்களை எமது துணை வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ், கலைப் பீடாதிபதி பேராசிரியர் இரா.சிவச்சந்திரன், வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் சத் தியசீலன், புவியியல் துறைத்தலைவர் பேரா சிரியர் கா.குகபாலன், பல்கலைக்கழக ஆசிரி யர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் அரச அதிகாரிகள் எனப் பலர் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருவது ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தையும், மகிழ்ச்சி யையும் கொடுப்பதாக உள்ளது.
நன்றி உதயன்
Reply


Messages In This Thread
சாட்டியில் 2000 ஆண்டுகளு - by hari - 10-07-2004, 07:29 AM
[No subject] - by tamilini - 10-07-2004, 01:38 PM
[No subject] - by hari - 10-07-2004, 03:49 PM
[No subject] - by tamilini - 10-07-2004, 04:13 PM
[No subject] - by kavithan - 10-07-2004, 09:15 PM
[No subject] - by Sriramanan - 10-08-2004, 01:47 AM
[No subject] - by hari - 10-08-2004, 04:54 AM
[No subject] - by tamilini - 10-08-2004, 11:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)