Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#20
பொங்கி எழுந்த மக்களும் அடங்கிப்போன சங்கரியும் - செங்குட்டுவன்

தமிழ் மக்களின் எழுச்சி நிகழ்வான பொங்குதமிழுக்கு அதன் ஆரம்ப காலம் முதல் இன்றுவரை உலகெங்கும் அது நடைபெற்ற வேளைகளில் அதற்குப் புலிச்சாயம் பூசிக் குழப்ப முயன்ற பொறுக்காத பேரின வாதிகளும் அவர்களின் எடுபிடிகளும் கைக்கூலிகளும் தொடர்ந்து அவர்கள் முயற்சிகளில் மக்களின் எழுச்சிக்கு முன்னாள் படு தோல்வி கண்டு வந்துள்ளனர்.

இம்முறை கனடாவிலும் அது மிக வெற்றிகரமாக வரலாறு காணத வகையில் உயிர்ப்புணர்வு மிக்க ஒன்றாக நடந்தேறியுள்ளது.


லட்சத்திற்கும் அதிகமான மக்களின் தமிழுணர்வு கரை கடந்த வெள்ளமென அலையெறிந்து திரண்ட போது எதிர்பாளர்களின் வெற்றுக்கோ~ம் அர்த்தமற்றதாக போயிற்று.

இப்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று இம்முறை இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டிய ஜாதிக ஹெலஉறுமயவின் இனவாத பிக்குகளும் இனவெறிப்புத்திஜீவிகளும் இப்போது எங்கே மொட்டாக்குப்போட்டுக் கொண்டு தலைமறைவாக இருக்கிறார்களோ தெரியவில்லை.

மக்கள் வேறு விடுதலைப்புலிகள் வேறு எனப் பேதம் பார்க்க முடியாது என்பது களநடவடிக்கையின் போது சரியான விடயமே...விடுதலைப்புலிகள் வழிநடத்த மக்கள் தான் போராடினார்கள், போராடுவார்கள், இதில் ஒளிவு மறைவுக்கே இடமில்லை. ஒடுக்கப்படும் மக்கள் அடக்குமுறையாளர்களுக்கு எதிராகப் போராடாவிடில் அவர்கள் எதிரிகளால் அழிக்கப்பட்டு விடுவார்கள். எனவே அவர்கள் பேராடியே தீரவேண்டும். அதனை பயங்கரவாதம் என எவரும் கூறுவார்களேயானால் அவர்கள் பைத்தியக்காரர்களாக அல்லது மேலாதிக்க வல்லாதிக்க சிந்தனை கொண்ட ஆக்கிரமிப்புணர்வுடன் கூடிய அரச பயங்கர வாதிகளாக இருக்க வேண்டும்.

அது வேறு விடயம் கனடிய பொங்கு தமிழுக்கு கடும் எதிர்ப்பை தன் பின்னணி சக்திகளின் உந்துதலுக்கேற்ப சுயபுத்தியின்றி காட்ட முயன்ற அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கர தேரர் (ஆச்சரியப்படாதீர்கள் ஆனந்த சங்கரியாரை இனி இப்படித்தான் அழைக்கவேண்டியுள்ளது) இந்த பொங்கு தமிழ் எழுச்சியால் எந்த மூலையில் புழுங்கிக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கப்போகிறார் என்று தெரியவில்லை. தமிழ் பொதுமக்கள் மத்தியிலே அவரது பிரசாரப் பொய்மைகள் எடுபடவில்லை. தேர்தலில் தமிழ் மக்கள் அவரைத் தங்கள் இனத்தின் துரோகியாக அடையாளப்படுத்தி தூக்கியெறிந்து விட்ட நிலையில் தனது வரலாற்றுத் தவறுகளை சுயவிமர்சனம் செய்து பார்த்து திருத்திக்கொண்டிருக்கலாம்.

ஆனால் அயலார் புத்திகேட்டு இப்படி அலறிக்கொண்டிருக்க வேண்டிய நிலையாகி விட்டது பொங்கு தமிழ் வேகம் சங்கதேரரின் அகமுகத்தை முழுமையாகவே அம்பலப்படுத்தி விட்ட நிலையில் இனி என்ன செய்யப் போகிறாராம்?

பேசாமல் ஹெலஉறுமயவுடன் இணைந்து அவர்களுக்கு ?ஜல்ரா? போட்டாலாவது ஏதாவது பயன் இருக்கும்..... அல்லது அரசியலுக்கு முழுக்கு போட்டு விட்டு அஞ்ஞாத வாசமாவது போகலாம்... ஆனால் கெடுபுத்தி சொற்கேளாதே! ஆனந்த மாக இருக்கவேண்டியார் அயலார் அடிபணிந்து சங்கரா என்று சொல்லி அரசியல் சன்னியாசம் கொள்ள வேண்டியதாயிற்று.

செங்குட்டுவன்/Eelanatham

நன்றி சூரியன் இணையம்



ஆனந்த சங்கர தேரர் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: நல்ல பெயர்
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)