Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இப்படியும் நடக்குது அட கடவுளே!!!!
#5
<b>மது வழங்க மறுத்த கடைக்காரர்
பொலீஸாரால் அடித்துக்கொலை</b>

உலகமதுவிலக்கு தினத்தில் சம்பவம்!!
உலக மதுவிலக்குத் தினத்தில் மதுபானக் கடை முகாமையாளர் ஒருவர் மது வழங்க மறுத்ததால் கோபமடைந்த பொலீஸ் கோ~;டியொன்று அவரை அடித் துக் கொன்றதுடன், அங்கிருந்த ஏனையவர் களையும் காயப்படுத்தி, கடைக்கும் சேதம் விளைவித்து விட்டு அங்கிருந்த மதுபா னப் போத்தல்கள் பலவற்றையும் அபகரித் துச் சென்றுள்ளது.

பொலனறுவப் பிரதேசத்தில் இச் சம் பவம் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள் ளது. கடை உரிமையாளரான வசந்த குண ரத்ன என்பவர் சம்பவம் பற்றிக் கூறியி ருப்பதாவது:-
உலக மதுவிலக்குத் தினத்தை அனுட்டிப்பதற்காக அரச அறிவித்தலொன்றுக்கு அமைவாக மதுபானக்கடை கடந்த 3 ஆம் திகதி மூடப்பட்டிருந்தது. அன்றைய தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலீஸ்காரர்கள் கடை முகாமை யாளரான குவின்ரஸிடம் ஒருபோத்தல் சாரா யம் தரும்படி கேட்டிருக்கிறார்கள்.
மதுவிலக்குத்தினம் என்பதால் மது பானக் கடை மூடப்பட்டிருப்பதாகவும் மது விற்கப்படமாட்டாதெனவும் அவர் பொலீ ஸாரிடம் தெளிவாகக்கூறியுள்ளார்.

இதனால், கோபமடைந்த பொலீஸ்காரர் கள் அவரை இழிவான வார்த்தைகளால் பேசிவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர் மேலும் பலரைச் சேர்த்துக் கொண்டு ஜீப்பில் வந்துள்ளனர். அவர்கள் கடையில் இருந்த ஊழியர்களையும் கடை முகாமையாளர்களையும் தாக்கி, கடையை உடைத்துத் திறந்து வெளியில் இருந்த மது பானங்கள் முழுவதையும் குடித்துவிட்டு அங்கிருந்த மதுபானப் போத்தல்களை ஜீப் பில் ஏற்றியதுடன் முகாமையாளரையும் ஏனைய ஊழியர்களையும் பொலீஸ் நிலை யத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

பின்னர் முகாமையாளரின் உதவியா ளர் நிலைமையை அவதானிக்கப் பொலீஸ் நிலையம் சென்றபோது குவின்ரஸ் இறந்து போனதாகவும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டுள்ளதாகவும் அறிந்தார்.
குவின்ரஸ் சட்டத்தை மீறி மது விற்க மறுத்ததால் பொலீஸாரால் அடித்துக் கொல் லப்பட்டுள்ளார் என்று குணரத்ன கூறியுள் ளார்.
இந்த விடயம் பற்றிப் புதிய பொலீஸ்மா அதிபரிடம் வினவியபோது சம்பவம் உண் மையானால் விசாரணை நடத்தப்பட்டு குற்றம்புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நன்றி உதயன் 06-10-04
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 10-01-2004, 03:58 PM
[No subject] - by Nellaiyan - 10-01-2004, 07:13 PM
[No subject] - by hari - 10-02-2004, 06:27 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 01:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)