Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யூலை 30 ஈழத்தமிழர் தேசிய தினமா?
#1
<b>[size=16]யூலை 30 ஈழத்தமிழர் தேசிய தினமா?</b>
சிவானந்தன்


பிரித்தானியாவில் தஞ்சம் கோரி வந்த
ஈழத்தமிழ் மக்களுக்காக சமயம் காக்க பல
சைவ கோயில்கள் உருவாகின. நன்று, சமயம்
ஒருபுறம், மறுபுறம் வியாபாரம், அதில் ஒரு பகுதி
தாயக பணி என விளம்பரம். யாவும் நன்று.
இப்போது சரி உணர்ந்தது நன்று.
எம் தாய் நாட்டில் ஆக்கிரமிப்பாளர் கிருஸ்தவ
ஆலயங்களை நிறுவி, தமிழர்களை மதம்
மாற்றினார்கள். இங்கு பாழடைந்து கைவிடப்பட்ட
கிருஸ்தவ ஆலயங்களில் சைவக் கோயில்கள்
உருவாகின.
கடந்த யூலை 30 பிரித்தானிய வங்கி விடுமுறை
நாளன்று ரூட்டிங் அம்மன் ஒர் ஆன்மீக விழா
என்று தேரேறி வீதி வழி வந்தார். கொறிஞ்
பாக்கில் பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அங்கு மேடையில் பொன். பாலசுந்தரம்
அவர்கள் அடியார்களுக்கு கூறிய செய்தி
வியப்பானது. அதாவது ரூட்டிங் அம்மன் தேர்
பவனிவரும் யூலை30 நாளை தமிழர் தேசிய
தினமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பலர்
வேண்டுகோள் விட்டதாக அறிவித்தார்.
பிரித்தானியாவில் நின்று தேசிய தினம்
பிரகடனப்படுத்த அனுமதி, தகமை உண்டா
ஐயாவிற்கு! தாயகத்தில் நின்று குரல் கொடுக்க
வேண்டும். ஐயாவின் சேவை நாட்டிற்கு அவசியம்.
பிரித்தானியாவின் பிச்சை சம்பளம் எடுப்பவர்கள்,
இப்பொழுதும் மகாபாரதம் படிக்கிறார்கள்.
எல்லை காக்க ஆள் இல்லையாம். போய்
முதலில் மண்ணை காப்போம்.
எம் மண்ணில் பல ஆலயங்களில் பூசை
இன்றி ஆக்கிரமிப்பு படையினரால் பூட்டப்பட்டு
உள்ளது. தமிழன் மதவழி பாட்டிற்கு சிங்கள
அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
1977ல் கலவரத்தில் ஆடிவேல் ரதம் பம்பலபிட்டி
நடுவீதியில் பலநாள் கிடந்தது. 1981 கலவரத்தில்
மாத்தளை அம்மனின் புதிய 5 தேர்கள்
எரிக்கப்பட்டன. 1986ல் செல்வந் சந்நிதியில்
புதிய பிரமாண்டமான சந்தன கட்டையில் செய்த
தேர் எரிக்கப்பட்டது.
தமிழன் தாயக மண்ணில் எதிரிகளால்
எரிக்கப்பட்ட தேர்களின் வரலாறு தெரியாது புலம்
பெயர் நாடுகளில் ஓடிவந்து தேர் ஓடுகின்றார்கள்.
வீதி பூராக தேங்காய் உடைக்கின்றார்கள். அன்று
தன் தாயக மண்ணில் நிலைநாட்ட வேண்டிய
உரிமைகளை, செய்யத் தவறி இன்று சைவ
மகாநாடு நடத்துகின்றார்கள். தமிழாராய்ச்சி
மாநாடு யாழ்ப்பாணத்தில் 10.1.1974 ல் நடந்த
படுகொலைகளையும் மறந்து, எமக்கு என்று ஓர்
நாடு அமைக்காது அலைகிறான் தமிழன்.
புலம் பெயர் நாட்டிலா தமிழர் தேசிய தினம்?
உதவும் கரமாக தாயக பணிகளையும், ஆன்மீக
பணிகளையும் செய்யுங்கள். சிங்கள அரசுடன்
சுகபோகம் அனுபவித்தவர்களால், செய்யத்
தவறிய கடமைகளை, எம் பிள்ளைகள் உயிர்
கொடுத்து செய்யும் விடுதலை போராட்டத்தை
கொச்சை படுத்த வேண்டாம்.

<b>தமிழர் விடுதலை போராட்டத்தை
உங்கள் சுயநலத்திற்காக
விற்க வேண்டாம்.</b>
நன்றிஒரு பேப்பர்.கொம்
Reply


Messages In This Thread
யூலை 30 ஈழத்தமிழர் தேசி - by hari - 10-06-2004, 08:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)