07-22-2003, 08:06 PM
இளைஞன் Wrote:Quote:எங்கள் நிலையை பல தடவைகள் சரியாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்....
தாங்கள் அவற்றை ஆற அமர இருந்து வாசியுங்கள் எல்லாம் புரியும்...
வெறுமனவே பெண்களுக்கு சார்பாக ஏதேனும் எழுத வேண்டும் என்று
எம்மில் பிழைபிடிக்காதீர்கள்...நிச்சயம் நீங்கள் அதில் வெற்றி பெறப்போவதில்லை....
காரணம்...எம்மிடம் போதுமான ஆதாரங்கள் உண்டு...
நீங்கள் எழுதிய அத்தனை கருத்துக்களையும் ஆரம்பத்தில் இருந்து வாசித்துக்
கொண்டுதான் வந்தேன். பெண்களுக்கு சார்பாக எழுதவேண்டுமென்று எண்ணி
இருந்தால், தொடக்கத்திலேயே எழுதியிருப்பேன். உங்கள் கருத்தில் முரண்பாடு
இருந்தும் விலகி நின்றேன்... ஆனாலும், முடிக்கப்படாத ஆய்வினை எடுத்து
வந்து அதனைக் காரணங்காட்டிப் பெண்கள் ஆண்களிலும் தாழ்ந்தவர்கள்,
அவர்கள் அடக்குப்படவேண்டியவர்கள் என்ற தொனிப்போடு கருத்து முன்வைத்த
போதுதான் எழுதத் தோன்றியது நண்பரே...!
\"ஆதாரம் இருக்கு ஆதாரம் இருக்கு... நாங்கள் பேசுவதெல்லாம் உண்மை\"
என்று எத்தனை தடவைகள் முழங்கப் போகிறீர்கள். ஆதாரம் இருந்தால் அதனை
கருத்தோடு பொருந்தும் பொழுது முன்வையுங்கள்.
Quote:இளைஞரே...உங்களுக்கும் உயிரியல் உண்மைகளுக்கும் வெகு தூரம் போல் தெரிகிறது...
அது மட்டுமன்றி...நாங்கள் எங்கள் பெருமைக்கு அங்கு குறிப்பிடவில்லை...நீங்கள்
சொல்லகராதி தேடக் கூடாது என்ற நோக்கத்திலேயே குறிப்பிட்டோம்....!
அந்தச் சாதாராண உண்மையையே உங்களால் சரிவரா இனங்காண முடியாத போது
உங்களுக்கு எங்களின் பார்வை பழையதாகத்தான் தெரியும்...
ஆமாம்! உயிரியல் உண்மைக்கும் எனக்கும் நிறையத் தூரம்தான். எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
நீங்கள் அர்த்தமுள்ளதை அடுத்தவர் விளங்கிக் கொள்ளும்படி எழுதினால் நிச்சயமாக பிறர்
விளங்கிக்கொள்வர். அதைவிடுத்து என்னுடைய கருத்தில் அர்த்தம் இருக்குிறது என்று நீங்களே
சொன்னால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?
Quote:உங்களைப் போல நாங்களும் இளைஞர்கள் தான்..என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்....
எதை எதிர்பார்க்கிறீர்கள்?
மீண்டும் மீண்டும் உங்களால் கருத்துக்களை கூர்ந்து காண முடியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது.....ஏற்கனவே நாம் குறிப்பிட்டுவிட்டோம் விஞ்ஞான ஆய்வுகளில் இன்னும்பலதை சாதிக்க வெண்டியுள்ளது என்று...அதற்குள் முடிவைக் கொண்டுவா என்றால் என்னாவது....மன்னிக்கவும் இப்படியான் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளுக்கு எம்மிடம் பதிலை எதிர்பார்க்காதீர்கள் பதில் இருந்தாலும் அதை உங்களுக்கு விளங்கப்படுத்த புதிய கல்வியியல் முறையை கண்டுபிடித்துக் கொண்டுதான் நாம் இங்கு வரவேண்டும்...!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

