Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நிதர்சனம்
#8
தமிழர்கள் பயங்கரவாதிகளாம் தமிழன் குடும்பம் தெரிவிக்கிறது.


ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் அமைப்பை பயங்கரவாதப்பட்டியலிலும், புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளையும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யவேண்டும். இவ்வாறு டென்மார்க்கில் வாழ்ந்துவரும் குமாரதுரை என்பவரும் அவருடைய பிள்ளைகளான மதி குமாரதுரை மற்றும் வதனன் குமராதுரை ஆகியோர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். டென்மார்க்கிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டென்மார்க்கிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள் எனவும் இவர்களுக்கு அகதி அந்தஸ்த்து கொடுத்தமை மிகவும் கவலை தருவதாக இவர்கள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதுடன் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட வேன்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த ஜந்து வருடங்களாக போலியான கருத்துக்களை இணையம் ஒன்றின் ஊடகாக வெளியிட்டு வருவதாகவும் பல பாதள உலக வியாபாரங்களிலும் ஈடுபட்டுவருவதாகவும் தெரியவருகிறது. திருகோணமலை மூது}ரை சொந்த இடமாக கொண்ட இவர்கள் திருகோணமலை முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் உடன்பிறந்த தம்பியின் பிள்ளைகள் என்பதும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/kumarathurai0.JPG' border='0' alt='user posted image'>

அண்மையில் இவர்களின் குடும்பத்தில் ஆனந்தசங்கரியின் மகள் திருமணம் செய்திருந்ததுடன் அத்திருமணம் இலன்டனில் இடம்பெற்றது. இவர்களின் பலமாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அழுத்தம் காரணமாக அரசியல் கட்சிகள் பலவும் இவ் விடயம் தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகள் புலிகள் அமைப்பை தடைசெய்து, பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ள போதும,; ஐரோப்பிய ஒன்றியம்; இது குறித்து இன்னமும் முடிவெடுக்காமல் இருப்பதாகவும், இவர்கள் அரசியல் கட்சிகளைக்கேட்டு வருவதாகவும் அந்நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

<img src='http://www.nitharsanam.com/public/gallery/lanka/kumar.JPG' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நிதர்சனம் - by sethu - 10-01-2004, 01:40 PM
[No subject] - by sethu - 10-01-2004, 01:41 PM
[No subject] - by tamilini - 10-01-2004, 03:11 PM
[No subject] - by sethu - 10-01-2004, 05:06 PM
[No subject] - by hari - 10-01-2004, 07:08 PM
[No subject] - by sethu - 10-01-2004, 11:04 PM
[No subject] - by sethu - 10-02-2004, 12:07 AM
[No subject] - by sethu - 10-05-2004, 12:40 AM
[No subject] - by sethu - 10-05-2004, 12:41 AM
[No subject] - by sethu - 10-05-2004, 12:42 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)