10-04-2004, 10:04 AM
Quote:ஒருவருடன் ஒப்பிட்டு மற்றவர் தேவையில்லை என்று கு}றுவதை விட எல்லோரும் தேவை என்று எண்ணுவது நல்லது..... இருவரும் நமக்கு தேவை அது தான் உண்மை
என்னுடைய கேள்வி, ஏன் நாங்கள் காசி ஆனந்தனைப்பற்றி தமிழ் ஊடகங்களில் அறியும் அளவுக்கு அப்பையா அண்ணை போன்றவர்களை பற்றி அறிந்ததில்லை? ஏன் எமது விஞ்ஞானிகளுக்கு நாம் கவிஞர்களுக்கு கொடுப்பது போன்ற முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்பது தான். ஒவ்வையாரை அறிந்திருக்கின்றோம், அவர் காலத்தில் இருந்த ஒரு விஞ்ஞானியை நாம் அறிந்திருக்கின்றோமா?
சிறி ரமணன், அப்பையா அண்ணையை பற்றிய இணைப்புக்கு நன்றி. நான் அவரை தொழில்நுட்ப விடயங்கள் சம்பந்தமாக 1988ல் ஒரு முறை சந்திக்க கிடைத்தது. 1997ற்கு பின் (1997ல் அப்பையா அண்ணை மறைந்து விட்டார் என்று அந்த இணைப்பு சொல்கிறது) தாராக்கி அவருடன் ஒரு நேர்காணலை செய்திருந்தார். ஆகவே உண்மையில் அவருடைய வரலாறு பற்றி எனக்கு இப்போது தெளிவில்லாமல் இருக்கின்றது.
''
'' [.423]
'' [.423]

