07-22-2003, 05:25 PM
kuruvikal Wrote:நாங்கள் ஆண்கள் என்பதற்காக ஆண் சார்பு நிலை எடுக்கின்றோம் என்பதல்ல....பெண்கள் அடக்கப்படவில்லை அடங்கினார்கள் என்பது தான் உண்மை...மனிதக் கூர்ப்பின் வழி நோக்கும் போது ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தான் தோன்றினர் ஒரே சூழலில் தான் வாழ்ந்தனர்...அப்படியிருக்க ஆண் பெண்ணை அடிமைப்படுத்த அல்லது அடக்க முனைந்தால் ஏன் பெண் எதிர்த்துச் சண்டையிடவில்லை....விலங்கள் பறவைகளைப் பாருங்கள் ஆண் பெண் என்றில்லாமல யார் அடக்க முனைந்தாலும் எதிர்த்து சண்டை இடுகின்றன....ஏன் பெண்கள் அப்படி செய்யவில்லை...<span style='font-size:23pt;line-height:100%'>ஆகவே பெண்கள் தாங்களாக சூழல் காரணிகளின் தாக்கங்களில் இருந்து தப்பி வாழ என்று ஒதுங்கியிருக்கிறார்கள்...அத்துடன் ஆண்களைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்...</span>ஆனால் இன்று நிலமை அப்படியல்ல சூழலை மனிதன் வென்று நிற்கிறான் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருக்கிறான் தனது பாதுகாப்புக்களை நன்கு விருத்தி செய்துள்ளான் எனவே பெண்கள் எனியும் பதுங்கியிருக்க வேண்டிய நியாயம் இல்லை அத்துடன் மனித வளர்ச்சிக்கு ஏற்ப ஈடு கொடுக்கத்தக்கதாக பெண்களையும் சமூகத்திற்கு ஏற்றார் போல் வாழ தயார் செய்வதைத்தான் பெண் விடுதலை ஆண் அடக்குமுறை அது இது என்று வீர வசனங்கள் பேசி பெண்களை உசுப்பி விட வேண்டிய கட்டாயம் உள்ளது...ஆண் பெண்களை அடக்க எண்ணியிருந்தால் இயல்பாகவே உள்ள தனது பலத்தைப் பாவித்து தலை நிமிர முடியாது செய்திருக்க முடியும்...ஆனால் அது இயற்கையின் நியதியல்ல.... அத்துடன் மனித பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட விடயமும் கூட....
பெண்ணின் மூளை கனவளவில் சிறியது எனும் போது அங்கு ஆணைவிட குறைந்த இயல்புகள் சில இருக்க வாய்ப்பு நிறைய உண்டு.... எனவே ஆண் மூளைக்கு நிகர்த்தது பெண் மூளை என்பது எடுபட முடியாதது மட்டுமன்றி நீங்கள் ஏற்கவில்லை என்பதற்காக ஆணின் மூளை திறன் கூடியது என்பதை மாற்றவும் முடியாது.....!
பெண்களுக்குத்தான் ஆண்களால் இன்று பிரச்சனை என்பது மிக மிக தவறு..அது மட்டுமன்றி அது பக்கச் சார்பான வாதமும் கூட...இன்று பல ஆண்கள் பெண்களால் திட்டமிட்ட வன்மங்களுக்கு இலக்காகி தமது வாழ்வியல் உரிமைகளை இழந்து வருகின்றனர் என்பது உண்மை.....அதை ஆண்கள் மனிதர்கள் என்ற வகையில் தட்டிக் கேட்க எமக்கு உரிமையுண்டு அதை யாரும் பெண்களுக்கெதிரான வாதம் என்று கூறி பெண்களின் தவறுகளை மறைக்க முயலக் கூடாது....!
சீதனம் கொடுப்பதே பெண்கள் தான் அப்படியிருக்க ஆண்கள் கேட்க நாங்கள் கொடுக்கிறோம் என்பது தவறானது ...நீங்கள் கொடுக்காமல் விட்டால் ஆண்கள் வாங்க மாட்டார்கள் ...அதே போல பெண்களைத் திருமணம் செய்துதான் வாழ் வேண்டும் என்பதும் உங்களால் ஆண்கள் மீது திணிக்க முடியாது...சமத்துவம் என்று வரும் போது தனிக்கட்டைகளாக வாழவும் தயாராகத்தான் வர வேண்டும்...ஆண் தனக்கு ஒத்துவரும் என்றால் திருமணம் செய்து வாழ்வான் இல்லாட்டி ஏன் வம்பில் மாட்டுவான் என்று விலகி நிற்பான்...அது அவர்களின் சுதந்திரம்...சீதனம் கேட்கவும் ஆணுக்கு சுதந்திரம் உண்டு கொடுக்க முடியாதவர்கள் விலக வேண்டியதுதானே....அப்படி எல்லாப் பெண்களும் விலகுவார்களா........?! முயற்சி இருந்தால் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.....அதற்காக ஆணின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டதிட்டங்களை வரைவதை நாம் வன்மையாக எதிர்கிறோம்...அது அவனின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு ஒத்தது....
எங்கள் உரிமைகள் பறிக்கப்படுவதையே நாம் எதிர்க்கின்றோம்....எமக்கு பெண்களைப்பற்றிய அவர்களின் விசேட சலுகைகளுடன் கூடிய உரிமைகள் பற்றிய கவலயில்லை...நாங்களே உரிமைகள் இழந்து கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு விசேட உரிமைகள் இல்லை என்பது மட்டும் என்ன நியாயம்.....பெண்கள் தங்கள் உரிமைகள் என்று எங்களை அடக்க முயலும் போது நாங்கள் அடங்க மாட்டோம்...ஆண் அடங்கியதாக வரலாறு கிடையாது மனிதனில் அல்ல எந்த இனத்திலும் தான்...பெண்களுக்கு என்ன மனித உரிமைகள் ஆணுக்கு நிகர்த்ததாக உள்ளதோ அது வழங்கப்பட்டே உள்ளது எடுத்துக் கொள்ளாதது எமது பொறுப்பல்ல ....ஆண்கள் அடக்குவதாக சொல்லி தங்கள் இயலாமையை மறைத்து ஆண்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதியோம்...!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இதையும் வாசித்து அங்கு எழுதப்பட்டதையும் வாசியுங்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: