10-03-2004, 02:52 PM
ஒரு முறை சிவபெருமானை சந்தித்த பெண்கள் "கடவுளே ஆண் பெண் இருவரும் சமம் என சரிபாதியாக காட்சியளிக்கும் நீ பிரசவத்தில் மட்டும் முழு சுமையையும் பெண்கள் மட்டும் சுமக்கவிட்டுள்ளாயே இது என்ன நீதி " என்று கேட்டனர். அதற்கு சிவபெருமான் "நான் உங்கள் நன்மைக்குதத்தான் அப்படி செய்தேன். ஆனால் நீங்கள் இன்று இப்படிக் கேட்டுவிட்டதால் இன்றில் இருந்து குழந்தையை பெண்கள் சுமக்கவேண்டும்இபிரசவ வலியை தகப்பன் அனுபவிப்பான் என்று கூறினார். சில நாட்களின் பின்னர் ஒரு பெண் குழந்தை ஒன்றைப்பெற்றாள்.அப்போது அப் பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரன் வேதனையால் துடித்தான். உடனே தன் மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டாள் எனடபதை தெரிந்துகொண்ட அப் பெண்ணின் கணவன் தன் மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலைசெய்தான். தாங்கள் கேட்டு வாங்கிய வரம் தங்களுக்கு ஆபத்தாக இருப்பதை புரிந்து கொண்ட பெண்கள் உடனே சிவபெருமானிடம் சென்று நாங்களே பிள்ளையையும் சுமக்கிறோம். நாங்களே பிரசவ வலியையும் தாங்கிக்கொள்கிறோம் என்று கேட்டனர்.சிவபெருமானும் அப்படியே ஆகட்டும் என்றாராம். (தயவு செய்து பெண்கள் கோபிக்காமல் இதை பகிடியாகவே எடுத்துக் கொள்ளவும்.)


