Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
SRI LANKA: Kidnapping; Torture; Attempted murder
#2
அருட் தந்தை நந்தன மணத்துங்க அவர்கள் சுவிசில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த போது சந்தித்தேன்.

30-35 வயது மதிக்கத் தக்க இளைஞரான இவர் என்னோடு ஏதேட்சையாக நட்பான போது இவர் இலங்கையில் என்ன செய்கிறார் என்று வினவினேன்.

ஒரு சிங்கள கத்தோலிக்க மத அருட்தந்தையாக இருந்த போதிலும் இலங்கையின் கண்டிப் பகுதியில் வாழும் இவர் இலங்கையில் நடை பெறும் மனித உரிமை மீறலுக்காக குரல் கொடுப்பதோடு நின்று விடாது அவர்களுக்கு நேரடியாக உதவி யும் வருகிறார்.

இதை நான் கடந்த மாதம் இலங்கை சென்ற போது நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அங்குள்ள மக்கள் பலர் இவருக்கே போலீசாரால் மரண அச்சுறத்தல்கள் உண்டு என்றனர்.

வெள்ளை அங்கி மட்டும் இல்லையென்றால் நீ உயிரோடு இருக்க மாட்டாய் என போலீசார் பயமுறுத்தியும் இவர் இக் கடமைகளில் ஈடுபடுவதால் எனக்கு இவர் மேல் மரியாதை ஏற்பட்டது.

இன-மத-மொழி பேதமுமில்லாமல் சேவை செய்யும் இவர் கயவர்களால் கற்பிழந்து தற்கொலை வரை சென்ற பல மலை நாட்டைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு அருட் சகோதரிகள் மூலமாக மறு வாழ்வும் கல்வியும் அளித்து வருகிறார்.

அவர் சொன்ன கதைகளை நான் விரைவில் தருகிறேன்.

வேதனைப் படும் ஒருவனது வேதனை புரியாமல் இறை தொண்டாற்றுவது போலியானது என்று அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் என்னை வியக்க வைத்தன.


மனித மனம் படைத்த ஒருவனால் இதை சொல்ல முடிகிறதே தவிர என்னால் என்ன செய்ய முடியுமென இதயம் கூனிக் குமுறுகிறது.

யாராவது இன்னும் ஒருவருடைய இதயம் குமுறாதா?

More details:-
http://ajeevan.blogspot.com/

- அஜீவன்
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 10-02-2004, 10:12 PM
[No subject] - by tholar - 10-03-2004, 02:21 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)