Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#17
தம்பி கவிதன்,

நீங்கள் பொங்கு தமிழ்பற்றி; எழுதியதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பொங்கு தமிழுக்கு இடம் இறுதிநேரத்தில் மறுக்கப்பட்ட போது அதற்காக இரவுபகல் பாராமல் தமது முழுமையான அரசியல் செல்வாக்கையும் பயன்படுத்தி இடம் எடுத்துக்கொடுத்தவர்கள் கூட விசனப்படும்படி நிகழ்ச்சிகளும் ஏற்பாடுகளும் அமைந்திருந்தன.

சுருக்கமாக சொல்லப்போனால் எமது மக்கள் உணர்ச்சிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அறிவுபுர்வமாக சிந்தித்து இவ்வளவு பணத்தையும் நேரத்தையும் மக்களையும் இன்னும் பயனுள்ளபடி நாம் பயன்படுத்தியிருக்க முடியும்.

உதாரணமாக இலங்கையில் கொலைகளும் வன்முறைகளும் பெருகி வருகின்றன. இவையெல்லாம் இன்று விடுதலைப்புலிகள் செய்ததாக சொல்லப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகளாக காட்டப்படுகின்றார்கள். இதைச்செய்பவர்களுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் தேவையில்லை. ஒரு சிலராகவே இதைச்செய்கின்றார்கள். இதனால் விடுதலைப்புலிகளை ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பெரிய பாதிப்பு இது.

இந்த பயங்கரவாதிகளாக காட்டும் முயற்சிகளுக்கெதிராக கனேடியதமிழர் இன்று வரை செய்தது என்ன? இவற்றை விடுதலைப்புலிகள் செய்யவில்லை என்று ஒரு அறிக்கை தானும் விடப்பட்டதா? தனித்து நின்று விடுதலைப்புலிகள் தாம் செய்யவில்லை என்று சொல்லும் நிலை. அன்று பொங்கு தமிழில் கூடிய அத்தனை ஆயிரம் மக்களும் விடுதலைப்புலிகள் இந்த கொலைகளை செய்யவில்லை என்று சொன்னால் எவ்வளவு பயனுள்ளதாக அது இருந்திருக்கும்? யோசித்து பாருங்கள். முடிந்தால் மற்றவர்களுக்கு சொல்லிப்பாருங்கள். இனியவது உணர்ச்சிகளுக்கு அடிமையாகி செயல்படுவதை விட்டு நிலைமையை ஆராய்ந்து உச்ச பயன்தரத்தக்க வகையில் செயற்திட்டங்களை நாம் அமைக்கவேண்டும்.

இதைச்சொல்வதற்காக என்னை எதிரியாக பார்க்கதீர்கள். பொங்கு தமிழில் பேசிய முன்னாள் பேராசிரியர் இலகுப்பிள்ளை சில மாதங்களுக்கு முன்னர்தான் நஷனல் போஸ்ற் பத்திரிகைக்கு விடுதலைப்புலிகளை குறிப்பிட்டு அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னவர். அப்படிப்பட்வரையே பொங்கு தமிழ் மேடையேற்றியிருக்கிறது. ஆகவே என்னை எதிரியாக பார்க்காதீர்கள்.
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)