10-01-2004, 04:15 AM
Jude Wrote:Quote:நான் பக்கத்து வீட்டு முருகன் பேசியது கேள்விப்பட்டிருக்கிறேன். கடவுள் பேசியதை இதுவரை அறியவில்லை.அதுதான் அப்படிக்கேட்டேன்நுற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முதல் தென்மதுரை என்ற ஊர் பாண்டிய நாட்டின் தலைநகராக இருந்தது. இந்த தென்மதுரை இலங்கைக்கு கீழே கடலுக்கடியில் இப்போது இருப்ப்தாப நம்பப்படுகின்றது.
தென்மதுரையில் தமிழ் வளர்க்க அரசன் ஒரு தமிழ் சங்கத்தை நிறுவினார். அது முதலாம் தமிழ் சங்கம் என்று இன்று அழைக்கப்படுகின்றது. அந்த அரசனின் பெயர் முருகன். அந்த முருகன் தான் பின்னாளில் தமிழ்க்கடவுள் முருகன் ஆனார் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
__________________________________________________
அந்த ஆய்வு எது என்று சொல்ல முடியுமா யூட்...
ஏனெனில் நான் இதுவரையில் கேள்விப்படாத புதிய விடயம் இது..
முடிந்தால் சரியான ஆய்வைப்பற்றிய சரியான தகவலைத்தரவும்..நானும் அதைப் பார்க்க ஆசைப்படுகிறேன்...

