10-01-2004, 12:52 AM
Jude Wrote:Quote:தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தேவையான கனேடிய அரசின் அங்கீகாரமும் ஒத்துழைப்பும் பொங்குதமிழால் கிடைத்ததாக தெரியவில்லை. கனேடிய துதுவர் பொங்குதமிழுக்கு முதல் விடுதலைப்புலிகளை சென்று சந்தித்திருந்த போதும், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கனடாவுக்கு வர அனுமதியை மறுத்திருக்கின்றது. கனேடிய ஆளும் கட்சி உறுப்பினர்கள் பொங்குதமிழை புறக்கணித்துள்ளனர். அடிப்படையில் கனேடிய அரசு விடுதலைப்புலிகளை வரவேற்காது என்பதை வெளியுலகுக்கு கனடா தெரிவிக்க நல்ல சந்தர்ப்பமாக பொங்குதமிழ் அமைந்து விட்டது. இது விடுதலைப்புலிகளை பொறுத்தளவில் ஒரு பின்னடைவாகும்.Quote:இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.
என்ன பலன் கிடைதிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
_________________
கவிதன்
ஆனால் நீங்கள் அறியவில்லையா பின்னடைவுகள் தான் வாழ்க்கையின் முதல் படி என்று. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். இது விடுதலைபுலிகளுக்காக நடத்த பட்டதோ என்னாவோ.. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள் விடுதலை புலிகள் அல்ல.. அவர்களுகே இத்தடை விதைக்கிறார்கள் என்றால் அதன்பின்னால் இலங்கை அரசோ வேறு கனடிய அரசுக்கு வேண்டிய ஒரு சக்தியோ செயற்படுகிறது என்று தானே அர்த்தம். என்னை பொறுத்தளவுக்கும் அரசியல் ரீதியாக கனடிய அரசு என்ன நினததோ... அதுவும் அமெரிக்காவின் தாலாட்டு பிள்ளை தானே ....ஆனால் கனடாவாழ் தமிழ் மக்கள் மத்தியில் இது ஒரு மாபெரும் வெற்றி .. புலம் பெயர்வாழ் தமிழர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி.. அவ்வாறு இருக்கும் போது இதனால் கனடாவோ வேறு எந்த நாடோ உண்மைக்கு புறம்பாகவும் .. தமிழர்களை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதிப்பது போலவும் செயற்படுவது அவர்களினதும் சிங்கள அடிவருடிகளினதும், தமிழ் தேசதுரோகிகளினதும்.. சொல்கேட்டு நடக்கின்ற கிளிப்பிள்ளைகளே.. இதனால் இவர்களுக்கு என்ன நன்மை என்பது தான் எனக்கு புரியவில்லை...... பல தமிழ் துரோகிகள் உலக நாடெங்கும் இருந்து தமிழர்கழுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகிறார்கள் இதனால் என்னதான் சாதிக்கா போகிறார்கள் என்று பார்ப்போம்..... அந்த வரிசையில் நீங்களும் இல்லாதிருந்தால் மகிழ்ச்சி.. இருப்பவர்களும் ஒருநாள் உணர்வார்கள் தங்கள் தவற்றை..... இப்படி பட்டவர்களின் தவறான கருத்துக்களால் பாதிக்கபடப்போவது தமிழ் சமுதாயமே ஒழிய வேறு ஒருவரும் இல்லை... எனவே நீங்களும் தவறான பாதையில் சிந்திக்காமல் இன்னொருபக்கத்தில் பல நன்மைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்பதை கருத்தில் கொண்டு செயற்படுங்கள். உங்கள் கருத்துக்களையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
என்னை பொறுத்தளவுக்கு எனக்கு அரசியல் எழுதுவதற்கு தெரியாது.. ஒரு உண்மை சம்பவம் என்ற ரீதியில் தான் பொங்குதமிழ் பற்றி இங்கு வழங்கி உள்ளேன்.
[b][size=18]

