09-30-2004, 11:16 PM
Quote:ஒரு சிறுவனை பார்த்து கேட்டாலே தம்பி எவ்வளவு அப்ப இருக்கும் என்றால் 50000 இருக்கும் என சாதாரணமாக சொல்வான் . ஆனால்,இப்படி யான செய்தி ஸ்தாபங்களின் செய்தியாளர்களுக்கு இதைக்கூடவா கணிக்க தெரியவில்லை...! அல்லது இவர்களின் பின்னால் யாராவது செயற்படுகிறார்களா...? எல்லா மக்களூம் ஒன்று சேர்ந்து சம உரிமை, கடமையுடன் வாழும் நாடு கனடா. அங்கு எங்கள் உரிமைக்காக, எங்களின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நாங்கள் நடாத்திய நிகழ்வில் வருகை தந்த மக்களின் எண்ணிக்கையை குறைத்து கூறுவதால் இவர்களுக்கு என்ன இலாபம்,..?இந்த எண்ணிக்கை இதுவரை எதை சாதித்திருக்கின்றது கவிதன்? விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் பெரிய பிரச்சினை பல நாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தடை. தமிழ்மக்கள் பெரும் தொகையில் திரள்வது இது முதல்முறையல்ல. ஆனால் அதனால் விடுதலைப்புலிகளுக்கும் போராட்டத்துக்கும் என்ன பயன்கிடைத்தது என்பது தான் ஆராயப்பட வேண்டிய விடயம். மேலும் இதற்கு பெருமளவு செலவானது என்பதையும் இந்தப்பணம் வாடகை, சேவைகள் என்று கனேடிய நிறுவனங்களுக்கே போய்ச்சேர்ந்தது நாம் மறக்க கூடாது.

