09-30-2004, 07:52 PM
பிரபல சிங்களத் திரைக்கலைஞர் காமினி பொன்சேகா காலமாகிவிட்டார்
ஜ கொழும்பிலிருந்து சிங்கதுரை ஸ ஜ வியாழக்கிழமை, 30 செப்ரெம்பர் 2004, 21:43 ஈழம் ஸ
சிங்களத் திரைப்படங்கள் மூலம் தன் நடிப்புத்திறனை வெளிப்படுத்திய காமினி பொன்சேகா சிறந்த கலைத்துவம் மிக்க கலைஞராக விளங்கினார். திரை நடிப்புடன் இயக்குனராகவும், டைரக்டராகவும் இவர் விளங்கினார்.
உலகப்புகள் பெற்ற திரைக்கலைஞரான லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸின் பல திரைப்படங்களில் காமினி நடித்து சர்வதேச மட்டத்தில் அறிமுகமானவர்.
1959ம் ஆண்டு வெளியான தெய்வ யோகயா என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் காமினி பொன்சேகா அவர்கள். 60, 70, 80களின் காலப்பகுதியில் சிங்களத் திரையுலகில் கொடிகட்டிப் பறந்த இவர், பெரிதாக வளர்ச்சி கண்டிராத சிங்களத் திரையுலகை வளர்தெடுத்து மக்கள் மத்தியில் புகழ்பெற வைத்த பெருமையும் இவருக்குண்டு.
பிற்காலத்தில் தமிழ்-சிங்கள அரசியல் பிரச்சனையை வைத்து கொட்டி வலிகய என்ற திரைப்படத்தை இவர் இயக்கினார்.
வடக்கு கிழக்கு மாகாண சபை ஆளுனராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இனவாதமற்ற ஒரு கலைஞனாக விளங்கிய இவர் இலங்கை இந்திய கூட்டுத்தயாரிப்பான நங்கூரம், நீலக்கடலின் ஓரத்திலே ஆகிய தமழ்ப்படங்களில் கூட நடித்திருக்கிறார்.
இவ்வருட ஆரம்பத்தில், இலங்கை திரையுலகம், காமினி பொன்சேகாவின் திரையுலகப் பொன்விழாவை பண்டாரநாயக்கா சர்வதேச நினைவரங்கில் கொண்டாடியபோது, இன மத மொழி பேதமின்றி, இலங்கைத் திரையுலகின் அத்தனை கலைஞர்களும் வந்திருந்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
அவ்விழாவில் உரையாற்றிய காமினி பொன்சேகா அவர்கள், திரைக்கலைஞர்கள் அரசியலுக்குள் காலடி எடுத்து வைப்பதை முற்றாகத் தவிர்க்கும் படியும், தனது அனுபவத்தில், பிரதான இரு சிங்களக் கட்சிகளுக்கும் தான் நிறையவே உழைப்பையும் ஆதரவையும் வழங்கியும்கூட, திரையுலகிற்கு அவர்கள் செய்வதாக உறுதியளித்த எதையுமே செய்ய முன்வரவில்லை என்றார்.
சிறீலங்காவின் பிரதான கட்சிகள் மக்களையும் திரையுலகையும் நிறையவே ஏமாற்றி விட்டதாகக் கவலையுடன் குறிப்பிட்ட காமினி பொன்சேகா அவர்கள், இனிமேலும் இக்கட்சிகள் திரையுலகிற்கு எதுவும் செய்வார்கள் என்று எதிர்பார்க்காது, திரைக்கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து திரையுலகை வளர்க்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் சமத்துவமான உரிமைகளுடன் வாழ வேண்டுமென்ற கொள்கையுள்ளவரும், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பது அவசியம் என்பதை சிங்கள மக்களிடையே வலியுறுத்தி வந்தவருமான பிரபல கலைஞரும் அரசியல்வாதியுமான அமரர் காமினி பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்களும் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தி நிற்கிறார்கள்.
நன்றி புதினம்

<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>