09-30-2004, 06:41 PM
<b>3 மாணவிகளை பாலியல் ரீதியாக இம்சை செய்த அதிபருக்கு 18 மாத சிறைத் தண்டனை: வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு
</b>
வவுனியாவில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் 13 வயது நிரம்பிய மூன்று மாணவிகளை பாலியல் ரீதியான இம்சைக்கு உட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டின் பேரில் அதிபர் ஒருவருக்கு 18 மாத சிறைத்தண்டனையும் தலா 10,000 ரூபா வீதம் முப்பதாயிரம் தண்டப்பணம் செலுத்துமாறு வவுனியா மாவட்ட நீதவான் எம். இளஞ்செழியன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் 2000ஆம் ஆண்டு ஆவணி மாதம் இடம் பெற்றுள்ளது. பாடசாலை முடிந்த பின்னர் மாலைநேர வகுப்பு என்று கூறி மாணவிகளை தனித்தனியாக அறைக்கு அழைத்துச் சென்று அங்கசேட்டை புரிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர்களாலோ அல்லது மாணவிகளாலோ பொலிசில் முறைபாடு செய்யவில்லை. எனினும் இந்த சம்பவம் தொடர்பாக சிங்களப் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானதன் பின்னர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சேவை வவுனியா பொலிஸ் னுஐபு க்கு தொலைபேசிமுலம் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு இருந்தது.
இதற்கு அமைவாக சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில் தண்டனை சட்டக் கோவை 345இன் கீழ் தனித்தனியாக 2002ஆம் ஆண்டு சித்திரை மாதம் வவுனியா நீதவான் நீதிமன்றில் வவுனியா பொலிசார் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம் பெற்றது. வழக்குக்கு பாடசாலை அதிபர் மாணவிகள் கல்வித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் சாட்சியம் வழங்கியிருந்தனர்.
இதற்கு இடையில் மாணவிகளும் பாடசாலை அதிபரும் வேறு பாடசாலைகளுக்கு சென்று இருந்தனர். வழக்கு விசாரணைகள் இடம் பெற்றது. கல்வித் திணைக்கள அதிகாரிகள் மாலைநேர வகுப்பு வைப்பதற்கு தாங்கள் அனுமதி வழங்கவில்லை என்று சாட்சியம் அளித்திருந்தனர். பாடசாலை அதிபர் தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றமானது பொய்யானது என்றும் அரசியல் பின்னணி கொண்டது என்றும் தெரிவித்திருந்தார்.
நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு இந்தியாவில் இவ்வாறான வழக்குகளில் வௌ;வேறு நீதிமன்றங்களில் வழங்கப்பட்ட தீரிப்புக்களை மேற்கோள் காட்டி 18 மாதகால சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணம் வழங்க வேண்டும் என்று வவுனியா மாவட்ட நீதவான் எம். இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
நன்றி புதினம்......!

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>