09-30-2004, 04:20 PM
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2004/09/20040929094637simonas_ap203body.jpg' border='0' alt='user posted image'>
<b>இராக்கில் பணயக்கைதிகளாக இருந்தவர்களின் அனுபவங்கள்</b>
இராக்கில் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட இத்தாலிய மற்றும் எகிப்தியர்கள், தங்களது அனுபவங்களைப் பற்றி விவரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செவ்வாயன்று விடுதலை செய்யப்பட்ட இரு இத்தாலிய உதவிப் பணியாளர்களில் ஒருவரான , சிமோனா டொரெட்டா, தானும் தன்னுடன் பிடித்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பணயக்கைதியும் , தங்களைப் பிடித்து வைத்திருந்தவர்களால் மரியாதையாக நடத்தப்பட்டதாகக் கூறினார்.
இத்தாலிய வெளியுறவு அமைச்சர், பிரான்கோ பிராட்டினி, பணயக்கைதிகளை விடுவிக்க பணம் ஏதும் தரப்படவில்லை என்று வலியுறுத்தினார். ஆனால், இத்தாலிய நாடாளுமன்றத்தின் வெளி விவகாரங்கள் குழுவின் தலைவர், குஸ்டாவோ செல்வா, சுமார் ஒரு மிலியன் டாலர்கள் பிணைத்தொகையாகக் கொடுக்கப்பட்டதாகத் தாங்கள் நம்புவதாகக் கூறினார்.
மற்றுமொரு சம்பவத்தில், அரபுத் தொலைக்காட்சி சேனலான, அல் ஜஸீராவில், இராக்கில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் , பிரிட்டிஷ் பணயக்கைதி, கென்னத் பிக்லியின் படம் வீடியோவில் காட்டப்பட்டது.
இந்த வீடியோக் காட்சியில், ஒரு இரும்பு கூண்டில் உட்கார்ந்திருக்ககும், பிக்லி, தன்னைக் கடத்தியவர்களின் நிபந்தனைகளுக்கு பணியுமாறு, பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரை அவர் கோருகிறார்.
from.. BBC Tamil

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>