09-29-2004, 04:04 AM
<b>குறுக்குவழிகள்-59</b>
USB port என்றால் என்ன?
டிஜிட்டல் கமெரா, ஸ்கானர், பிரிண்டர், மெளஸ், இவைகளில் பொதுவாக காணப்படுவது என்னவெனில் Port என அடித்துக்கூறலாம். Port என்றால் நினைவிற்கு வருவது serial, parallel, com port கள்தான். இவைகளில் pin கள் கொண்ட Male port, துவாரங்கள் கொண்ட Female port என இருவகையுண்டு. இவைகள் வட்டமாகவோ அல்லது D என்ற எழுத்து வடிவத்திலோ அதிகமாக காணப்படும். ஆனால் இந்த port களை எல்லாம் பாவனையிலிருந்து ஒதுக்கிக்கொண்டு முன்னுக்கு வந்துகொண்டிருப்பது Universal Serial Bus (USB) port ஆகும். தற்போதைய நவீன சாதனங்கள் பலவற்றிலும் காணப்படும் இந்த போட் வினோதவடிவங்கொண்டவை. நீள்சதுர பெட்டி போன்ற தோற்றம்கொண்டவை; அடிக்கடி கழற்றி பூட்டவேண்டிய சாதனங்களை இணைப்பதற்காக கம்பியூட்டரின் முன்புறமும் சிலவேளைகளில் காணப்படும். அப்படி காணப்படாதவிடத்து பின்புறமிருந்து extension cord மூலம் இன்னொரு USB port ஐ முன்பக்க மேசைக்கு கொண்டுவரலாம்.
இந்த USB port உடன் சாதனத்தை இணைக்கும் வயரின் இரு முனையிலும் இரண்டு கனெக்டர்கள் காணப்படும். அவை Type A, Type B எனப்படும். Type A கம்பியூட்டருடனும் Type B சாதனத்துடனும் இணையும்.
USB Port Type A Connector Type B Connector
தற்போது USB Flash Memory என அழைக்கப்படும் Key tag ல் கொழுவக்கூடிய, பேனா கத்தி போன்ற தோற்றம்கொண்ட, கையடக்கமான drive கள் பாவனைக்குவந்துள்ளன. இவைகள் 32 எம்பி, 128 எம்பி, 256 எம்பி, 512 எம்பி அளவிகளில் கிடைக்கின்றன. இதை USB port இனுள் சொருகிவிட்டால் Floppy Drive போல் வேலைசெய்யும். தகவலை பதிந்து விநாடியில் கழற்றி எடுத்துக்கொண்டு செல்லலாம். Floppy disk ல்1.44 எம்பி ஆனால் இதிலோ 512 எம்பி கொள்ளும்; Floppy disk இலும் பார்க்க காவிச்செல்ல வசதியானது.
இந்த் USB port , Plug and Play தொழில்நுட்பத்தில் இயங்குகின்றது; Serial and Parallel bus கள்போல் தகவல்களை கம்பியூட்டருக்கும் சாதனத்திற்குமிடையில் பரிமாற்றம்செய்கிறது; மென்பொருள் போல் திருத்திய பதிப்புகளைகொண்டது; பழையது பதிப்பு 1.1, 2002 ல் அறிமுகப்படுத்தப்பட்ட பதிப்பு 2.0. புதிய பதிப்பு பழையதிலும் பார்க்க 40 மடங்கு வேகமானது அத்தோடு பழைய பதிப்போடு ஒத்திசைவானது. (Backward compatible with Version 1.1)
அதிகம் மின்சாரம் தேவைப்படாத சாதனங்கள் தமக்கு தேவையான மின்சாரத்தை USB port இலிருந்து பெற்றுக்கொள்ளலாம். 127 சாதனங்களை இந்த USB port ஒவ்வொன்றிலும் Hot Swap முறையில் இணைக்கலாம். அதாவது கம்பியூட்டரை நிறுத்தி, இணைத்து, பின் reboot செய்யாது கம்பியூட்டர் வேலைசெய்துகொண்டிருக்கும்போதே இணைக்கலாம், கழற்றலாம். இணைத்தவுடன் கம்பியூட்டர், சாதனத்தை கண்டுகொள்ளும். கம்பியூட்டரிடம் Device driver இல்லதுவிடின் சாதனத்துடன் வந்த சீடி ஐ D: drive இனுள் நுழைக்கச்சொல்லிக்கேட்கும்.
இயங்குதளம் Windows 95 Rev B க்குப்பின் வெளிவந்த எல்லா Windows பதிப்புகளிலும் USB வேலைசெய்யும். உங்கள் கம்பியூட்டரில் USB port இல்லாதுவிடின் 4 USB port உள்ள ஒரு PCI card ஐ வாங்கி கம்பியூட்டரின் PCI ஸ்லாட்டில் (Slot) இணைத்துக்கொள்ளலாம். USB என்றால் என்ன என புரிந்துகொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன்.