09-28-2004, 10:50 PM
Quote:அமெரிக்க உயர் தொழில்நுட்பம் அடைய முடியாத இலக்குகளைக் கூட கரும்புலிகள் அடையலாம்... மனிதனை விட சிறந்த ஒரு தொழில்நுட்பம் உலகில் உண்டோ..அமெரிக்க இராணுவம் பயன்படுத்தும் ஹோவிற்சர் பீரங்கியை விடுதலைப்புலிகள் முல்லைத்தீவில் கைப்பற்றிய பின் விடுதலைப்புலிகளின் பலம் பலமடங்கு அதிகரித்திருந்ததையும், பின்னர் சிறிலங்கா அரசு கிளஸ்ரர் (கூட்டு) எறிகணைகளை பயன்படுத்தி சாவகச்சேரியை எரித்த போது விடுதலைப்புலிகள் பின்வாங்க வேண்டி வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கரும்புலித்தாக்குதல்களால் யாழ்ப்பாணம் பறிபோவதையோ, அல்லது மூத்த தலைவர்கள் ஊடறுப்பு தாக்குதல்களால் கொல்லப்படுவதையோ தடுக்க முடியவில்லை. ஆனால் அமெரிக்க தொழில்நுட்பம் எத்தனையோ எதிரிகளை கொண்ட அமெரிக்காவின் அரசியல்வாதிகளை இன்று பாதுகாப்பாக வைத்திருக்கின்றதை இன்று காண்க்கூடியதாக உள்ளது அல்லவா?

