09-28-2004, 09:26 PM
<b>பனிச்சங்கேணி தாக்குதல் இராணுவத்தினுடைய செயல் </b>
மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேனியிலுள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கு காவலரன் மீது இன்று மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமானது சிறீ லங்கா இராணுவத்திற்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம் சுமத்தியுள்ளார். கிடைத்த தகவலின் படி கிரிமிச்சை இராணுவ முகாம் திசையிலிருந்து இந்த எறிகனைகள் ஏவப்பட்டிருப்பது போல் தெரிகின்றது. இந்த தாக்குதலுக்கும் இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக மக்கள் கருதுகின்றார்கள்.
இது சமாதானத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது. அமைதிச் சூழ்நிலையை குழப்புவதை நோக்கமாகக் கொன்ட இத்தகைய தாக்குதல்கள் மீன்டும் கடுமையான யுத்தத்தை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இதே வேளை இந்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பாராளுமன்ற உறுப்பினர் சென்று பார்வையிட்டார்.
நன்றி நிதர்சனம்

<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>