09-28-2004, 02:16 PM
<b>வாகரைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் செல் விழுந்து வெடித்தது </b>
மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இன்று நண்பகல் மோட்டார் செல் விழுந்து வெடித்த சம்பவத்தில் 40 வயது குடும்பப் பெண்னொருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொரு பெண் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோட்டார் செல் பனிச்சங்கேணியிலுள்ள விடுதலைப் புலிகளின் காவலரணிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள வீடொன்றில் விழுந்து வெடித்துள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னணி காவலரணை இலக்கு வைத்து, இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து இராணுவம் இந்த மோட்டார் செல் தாக்குதல்; மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
கொல்லப்பட்டவர், பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ்.காளிப்பிள்ளை (வயது 40), காயமடைந்தவர் கே.உதயச்செல்வி (வயது 37) எனவும் வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி நிதர்சனம்

<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>