09-27-2004, 11:21 PM
இலண்டன் சங்கமம் வானொலியின் திறந்த கதவுகள் நிகழ்சியை நிறுத்துமாறு கோரிக்கை.
ஜ திங்கட்கிழமைஇ 27 செப்ரெம்பர் 2004இ 01:16:55 பி.ப. ஸ ஜ சுவிஸ் வயனி ஸ
இலண்டன் சங்கமம் வானொலியுூடாக ஒலிபரப்பாகி வரும் திறந்த கதவுகள் என்ற வானொலி நிகழ்ச்சியினை உடனடியாக இடைநிறுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகளை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ள வேண்டுமென புளொட் அமைப்பினரும் மாற்று இயக்க உறுப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நேற்று இடம்பெற்ற திரு.வே.பாலகுமாருடனான சந்திப்பின் போதே, புளொட் அமைப்பின் தற்போதய சுவிஸ் நாட்டு உறுப்பினர் ஒருவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை விடுத்த புளொட் உறுப்பினர் அண்மையில் மட்டக்களப்பிலிருந்து சுவிஸ் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலகுமார் அவர்களைச் சந்தித்தபோது இந்த நபர் தன்னை ஒரு புளொட் உறுப்பினர் என அறிமுகம் செய்தே இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஐரோப்பாவில் இருந்து ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி ஐரோப்பாவில் நடைபெறும் கொலை கொள்ளை காட்டிக் கொடுப்பு தேசவிரோத நடவடிக்கைகள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளை இனங்காட்டுதல் மாற்று இயக்க உறுப்பினர்களின் புலம்பெயர் நடவடிக்கைகள் மாற்றுக்கருத்துகள் என மேற்கொள்ளப்படும் போலிப்பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கு எதிராகவும் தாயகத்தில் நடைபெறும் உண்மைகள் தமிழ்த்தேசியக்கருத்துகள் கடந்தகால தமிழர் வரலாறுகள் செய்திகள் ஆய்வுகள் தமிழ்த்தேசியத்தை வலுப்பெறத்தேவையான கருத்துக்களை வெளியிடுவதை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதோடு, ஐரோப்பாவில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான முறையில் நடைபெறும் குற்றச்செயல்கள் தமிழர்களால் ஐரோப்பிய நாடுகளின் சட்டத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்டரீதியற்ற மோசடிகளையும் இனங்கண்டு திறந்த கதவுகள் நிகழ்ச்சியுூடாக வெளியிட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி நடாத்தும் நடுநிலையான பத்திரிகையாளன் ஒருவருக்கும் கொலை அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. உடனடியாக நிகழ்ச்சி நிறுத்தப்படாவிட்டால் நோர்வேயில் இவர் கொலை செய்யப்படுவார் என மாற்று குழு உறுப்பினர்கள் தெரிவிதுள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஐரோப்பாவில் மாற்று இயக்க உறுப்பினர்களும் தேசவிரோதக் கும்பல்களும் பல காலமாக ஆட்கடத்தல் கொலை போதை வியாபாரம் மோசடிகள் பயண முகவர் வியாபாரம் போன்றவற்றை தமது தொழிலாகச் செய்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திறந்த கதவுகள் நிகழ்ச்சியானது கருணாவின் குழப்பத்தை தொடர்ந்து ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் மிகவும் முக்கியத்துவம் பெற்றதுடன் தமிழ்த்தேசியத்திற்குப் பெரும் பங்காற்றி வருவதும் பல இலட்சம் மக்களிடம் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது சுவிஸ் வந்திருக்கும் புளொட் உறுப்பினர் தொடர்பான இரகசியத்தகவல்களை நிதர்சனம் விரைவில் வெளியிடவுள்ளது. இவர் வந்து சேர்ந்த பின்னணி ஆகியவற்றுடன் கூடிய திடுக்கிடும் தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளது.
சம்பந்தப்பட்ட ஊடகவியலாளனைக் காப்பாற்ற சமூகப்பொறுப்புமிக்கோரும் , அனைத்துத் தமிழ்மக்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
நன்றி - நிதர்சனம்.கொம்