09-26-2004, 06:56 PM
tamilini Wrote:<img src='http://www.yarl.com/forum/files/animation1rose_2.gif' border='0' alt='user posted image'>
கூண்டுக்கிளி இவள்..
குலமகள்
உனக்கான மணமகள்
பாத்திருந்து பாத்திருந்து..
உனக்காக காத்திருந்து..
களைத்துவிட்டால்..
கடைசியில் உன்னை தேடி...
கால்கள் தேய நடக்கின்றாள்..
உனதன்பின் நினைவுடனும்..
இந்த பூங்கொத்தின் துணையுடனும்...
நீ எந்த உலகில் இருந்தாலும்..
உன்னை அடைவேன் என்ற
நம்பிக்கையில்............!
தன்னவன் தன்னை நினைந்துருக
நிலவோடு காய்வேன் என்றவள்
கணத்தோடு தன் எண்ணம் மாற்றி
எண்ணம் நிறைந்தவனை
தேடிப் புறப்பட்டாள் போலும்...!
பாவம் அவன் எங்கு காய்கிறானோ
தன் காதலிக்காய் காத்திருந்து
செல்லட்டும் கவிக் கடிதங்கள் கடுகதியாய்
மன்னவன் வரட்டும்
கன்னியவள் கனவுகள் நனவாகி
நாணம் சிந்த....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

