Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கி எழடா தமிழா..!
#10
[u]<span style='color:red'><b>இது கனடாவா..? தமிழீழமா..? என் அனுபவத்தில் கொஞ்சம்...</b>


[size=16]சாரி.. சாரியாக திரண்ட மக்கள் கூட்டம் இது கனடாவா..? அல்லது தமிழீழமா..? என என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது. எங்கு பார்த்தாலும் எம் இனம்..! எம் சனம்..! எம் குரல்...! அக் குரலில்..! அவ் சனத்தில்..! அவ் இனத்தில்..! நானும் ஒருவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆம்..! இன்று காலையில் இருந்து இவ் செய்தியை எழுதிக்கொண்டிருக்கும் நேரம் வரைக்கும் ரொறன்ரோ நிலக்கீழ் தொடரூந்துகளில் தமிழ் மக்கள் கூட்டம் அலை மோதியவண்ணமே உள்ளது.

இன்று மதியம் நான் நிலக்கீழ் தொடரூந்தில் எனது நண்பர்களுடன் இவ் நிகழ்வுக்கு பயனித்த போது அவ் நிலக்கீழ் தொடரூந்து எம்மக்களாலேயே நிறைந்திருந்தது. எங்கு பார்த்தாலும் தமிழ் மக்கள் கூட்டம் .தொடரூந்து ஓட்டுனரோ இடையிடை அடுத்த தொடரூந்தில் ஏறுமாறு மக்களுக்கு எச்சரிக்கை விட்டபடி கதவுகளைமூடி சென்றார். என்ன அதிசயம் இதுவரை ரொறன்ரோ மாநகரின் தொடரூந்தில் காணாத ஒரு சன நெருசல். மூன்று தொடரூந்துகளை தொடர்ச்சியாக எடுத்து ஒருவாறாக ரொறன்ரோ பாராளுமன்ற திடலுக்கு அருகில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இறங்கினோம். யாழ்தேவியில் பயணித்தவர்களுக்கு இதை விபரிக்கவே தேவையில்லை அப்படி ஒரு அனுபவம் தான் இதுவும். ஆனாலும், அவ் அனுபவத்தை இன்று தான் நான் அனுபவித்தேன் என்று கூறலாம். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் தண்டவாளத்தை மட்டும் தான் கண்டிருக்கிறேன், அதன் பின் அதுவும் இல்லை, ஆனால் அவ் அனுபவம் பற்றி அம்மா, அப்பா சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தான் அதற்கு ஒப்பிட்டிருக்கிறேன். தொடரூந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்து பார்த்தால் எல்லா பக்கங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இராணி பூங்காவை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். நாமும் அதற்குள் இடையில் பூந்து நூறு மீற்றர் தூரத்தில் இருந்த பூங்காவை நோக்கி நடந்து சென்றோம். வழி எங்கும் மாணவர் அமைப்பை சேர்ந்த இளைஞர்களும் யுவதிகளும் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் பொங்குதமிழ் என எழுதப்பட்ட உடைகளை அணிந்து வருகை தந்துகொண்டிருந்த்த மக்களின் வீதிப்பாதுகாப்பு உட்பட மற்றும் பல உதவிகளையும் வழங்கிய வண்ணம் இருந்தார்கள். பூங்காவை நோக்கினால் அங்கு சும்மார் 75000 க்கு மேற்பட்ட மக்கள் ஓரிடத்தில் கூடி பூங்கா நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. இப்படி ஒரு மக்கள் கூட்டத்தை இதுவரைக்கும் என்வாழ் நாளில் கண்டேனோ என்று எனக்கு தெரியவில்லை. பார்க்க போனால் நல்லூர் திருவிழா போல் இருந்தது.

அப்படியான , எம்மக்கள் நிறைந்த அச் சூழலில், ஒரு புலம்பெயர்ந்த நாட்டில், நான் எனக்கு கிடைத்த சிலமணி நேரங்களை செலவழித்ததை இட்டு மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதன்பின் ஆரம்ப நிகழ்வுகள் , மற்றும் பல பேச்சாளர்களின் உரைகள், இளம் தலைமுறையினரின் நிகழ்ச்சிகள், என பல நிகழ்வுகள் இடம்பெற்றன. இடையிடை மக்கள் கோசங்களை கூறியும், கைகள் ,கொடிகள், தேசியத்தலைவரின் படங்களை அசைத்தும் தமது ஆதரவை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.

இவ்வாறு நடந்து கொண்டிருந்த இவ் நிகழ்வுக்கு மக்கள் தொடர்ந்து வந்த வண்ணமும் சென்ற வண்ணமும் இருந்தனர். ஆனால், நிகழ்ச்சி நிறைவு பெறும் மட்டும் பூங்கா நிறைந்து வழிந்த வண்ணமே இருந்தது. இவ்வாறு மக்கள் ஒரே சீராக வருவதும் போவதுமாக இருந்தது தான் கனேடிய காவல் துறையினரின் வேலையை இலகுவாக்கியது என்பது என்கருத்து. இல்லாவிட்டால் பூங்காவை சுற்றியுள்ள வீதிகளை மூடி மக்கள் கூட்டம் வீதியிலும் நிக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஆனாலும், வீதிப் போக்குவரத்தில் ஓரளவு நெரிசல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுவர்கள் முதல் பெரியோர்கள் முதல் ஆர்வத்தோடு கலந்து கொண்ட இவ் நிகழ்வு கனடாவில் இடம்பெற்ற ஒரு மிகப்பெரிய நிகழ்வு. இது எம் மக்களின் பலத்தை காட்டிய நிகழ்வு. இது மேன்மேலும் பொங்க என் வாழ்த்துக்கள்.

திரும்பவும் அதே யாழ்தேவி பயணத்தில் வீடுவந்து சேர்ந்துவிட்டேன்.................

இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மற்றும், இணையத்தளம் வாயிலாகவும் , வானொலி மூலமாகவும் , தொலைக்காட்சி மூலமாகவும், பத்திரிகை மூலமாகவும், வாசித்து, கேட்டு,பார்த்து மகிழ்ந்த அனைத்து உறவுகளுக்கும் எனது வாழ்த்துக்கள்</span>
கவிதன்
2004/09/25

http://www.kavithan.yarl.net
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by tamilini - 09-18-2004, 03:30 PM
[No subject] - by shanmuhi - 09-18-2004, 04:18 PM
[No subject] - by AJeevan - 09-20-2004, 12:57 PM
[No subject] - by ஆவி - 09-24-2004, 12:25 PM
[No subject] - by vasisutha - 09-25-2004, 05:07 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 04:36 AM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:36 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:40 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 05:42 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 08:43 PM
[No subject] - by kavithan - 09-26-2004, 11:26 PM
[No subject] - by Jude - 09-30-2004, 11:16 PM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:06 AM
[No subject] - by Jude - 10-01-2004, 12:20 AM
[No subject] - by kavithan - 10-01-2004, 12:52 AM
[No subject] - by Jude - 10-01-2004, 08:52 PM
[No subject] - by kavithan - 10-02-2004, 05:14 AM
[No subject] - by Jude - 10-03-2004, 07:29 AM
[No subject] - by Kanani - 10-06-2004, 02:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)