Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடிகர் கமலின் காதல் கடிதம்
#1
<b>நடிகர் கமலின் காதல் கடிதம்</b>

1.12.1982

அன்பே உனக்கொரு கடிதம்,
எனக்கு உன்மேலுள்ள காதலை, ஆயிரம் முறை வார்த்தைகளில் நனைத்து உனக்கு அஞ்சலியாக்கி விட்டேன். உனதுணர்வை நானும், எனதுணர்வை நீயும், வார்த்தையின்றி அடையாளம் கண்டுகொள்ளும் உன்னதத்தை நம் காதல் எய்திவிட்டபின், வார்த்தைகள் திகட்டுகின்றன. இனி என் கடிதங்கள் வெற்றுக் காகிதங்களாக உனை வந்தடைந்தாலும் என் நிலையறியும் திறன் உனக்குண்டு. நான் அறிவேன்.
பின் ஏன் இந்தக் கடிதம்?

நம்முறவின் உன்னதம் உலகுக்குப் புரியாமல், அது ஊமையாக மாண்டுவிடக்கூடாது என்பதற்காக, நாளை மரணம் நம்மைப் பூஜைக்குரியவர்களாக ஆக்கிவிட்ட பின்பு, நமது சரிதையின் உயிர்ச்சான்றுகளாக இக்கடிதங்கள் வாழும். இன்று நம்முறவுக்கு கண்டனம் சொல்லும் சமுதாயம், நாளை நமக்குப் பின் நமது கால் துகள்களைக்கூட பத்திரப்படுத்த முற்படுமே, அப்போது இக் கடிதங்கள் அவர்களுக்குப் பொக்கிஷமாகும்.
எனவே, காதலி இக்கடிதத்தைப் பத்திரப்படுத்தி வை. இன்றைய விமரிசனங்களில் சிக்கிச் சிதைந்துவிடாமல் பாதுகாத்து வை. காதலுக்கும் அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசம் இம்மி அளவே என்பதை இன்று நாம் உணர்ந்ததை நாளை அவர்கள் புரிந்து கொள்ளும் வரை வெறும் பரிச்சயம் என்ற இடக்கரடக்கலின் நிழலில் நம் காதல் வாழட்டும்.
நேற்றைய புரட்சிக்காரர்களின் திருட்டுக் கவிதைகள்
இன்று தேசிய கீதங்களானது போல்

நாளை நம் காதலும்...
உனது


நான்
பல நாட்களுக்குப் பிறகு...
சரியாகச் சொன்னால்
20 வருடங்களுக்குப் பிறகு
மீண்டும் உனக்கொரு காதல் கடிதம்.
உன் விலாசம் எப்படியும் மாறும்
என்ற காரணத்தினாலோ என்னவோ
உனது விலாசத்தை காதலி என்பதோடு
அன்று விஸ்தீரணம் செய்யாது விட்டுவிட்டேன்.
காதலி... மீண்டும் உனக்கொரு கடிதம்.
நான் முன்பு எழுதிய கடிதம்
உனக்கல்ல எனினும் இத்துடன்
அதையும் இணைத்துள்ளேன்.
காதல் ரிஷிகளின் மூலம் பார்ப்பது
அனாசாரமாகாது. பார்த்துப் புரிந்துகொள்.
பழைய கடிதத்தின் சொந்தக்காரியிடம்
இந்தக் கடிதத்தைக் காண்பிக்க வேண்டிய
அவசியமில்லை. அவளுக்கு ஆர்வமும்
இருக்க வாய்ப்பில்லை.
காதல் மாறாதது என்பது
உண்மை. ஆள் மாறினாலும்
இல்லாள் மாறினாலும் காதல்
மாறுவதில்லை.
கூடி வாழ்வதும் காதலில் கூடுவதும்
இருவேறு நிலைகள்.
அவள் என்னவள்
அவன் என்னவன் என
அறம் என்ற பெயரால் அடையாளச்
சூடு வைக்கும் மிருகத்தனம்
மனிதனுக்கே உரித்தானது.
நமது ஆறாவது உணர்வை
போற்று. பண்டிதர்கள் மெதுவாக
உறுதியான மற்ற
ஐந்து உணர்வுகளின்
உத்வேகம் குறைந்து வருவதை
உணர மறுக்கிறார்கள்.
அந்த மறுப்பில்
என் (நம்) காதலும் சிக்குண்டு
தவிக்கிறது.
மௌன விரதம் பூண்டவர்கள்
சமிக்ஞை செய்து
கவிதையை வைக்கிறார்கள்.
நான் காதலன் கவிஞன்
ஆதலால் காதலால் மீண்டும்
உனக்கொரு கடிதம்.
இதில் மறுபடியும் விலாசமில்லாமல் விட்டிருப்பது
விபத்தல்ல
நீ விலாசத்தை மாற்றிக்கொண்டே யிருக்கிறாய்
நான் என்ன செய்ய?
அதே நான்தான்,
நீ மட்டும் வேறு!


நன்றி விகடன்
<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நடிகர் கமலின் காதல் கட - by ஆவி - 09-26-2004, 02:04 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)