Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கருணாவின் சகோதரன் புலிகளின் நடவடிக்கையில் பலி...!
#14
இன்று வீரகேசரியில் வெளிவந்த கட்டுரையிலிருந்து..

சளைக்காது மேற்கொள்ளப்பட்டு வரும் களையெடுப்பு நடவடிக்கை..


தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகளை ஆணிவேருடன் பிடுங்கி அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளில் புலிகள் தீவிரமாக ஈடுபட்டிருப்பது அண்மைக்கால சம்பவங்களிலிருந்து பரிபூணமாகத் தெரிகிறது.

அந்த வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பினால் நீக்கப்பட்ட கருணாவின் சகோதரரான றெஜியின் மரணம் அவர் சார்ந்த சக்திகளுக்குப் பேரிடியாக விழுந்துள்ளது.

கருணா, புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட முன் புலிகளின் ஆண்டான்குள கோட்ட இராணுவப் பொறுப்பாளராக இருந்த ரெஜி, பின்னர் கருணாவுடன் இணைந்து புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டார். புலிகள் அமைப்பில் நீக்கப்பட்ட பின் கருணா, ரெஜியை பெரும் இராணுவ தளபதியாகக் காட்ட முனைந்ததுடன் கிழக்கில் இருந்த விசாலகன் படையணி, விநோதன் படையணி, அன்பரசி படையணி, மதனா படையணி, ஜோன்சன் ஆட்லறி பிரிவு, ஆகியவற்றைக் காட்டி அவையாவும் தன்னுடைய கட்டுப்பாட்டிலிருப்பதைப் போன்ற தோற்றப்பாட்டை மக்கள் மத்தியில் ஏற்படுத்த முனைந்தார். கிழக்கில் தமது மேலாண்மையை முற்றாக நிலை நிறுத்தும் நோக்குடன் அப்போது திருகோணமலை ஊடாக விஷேட நடவடிக்கையை மட்டக்களப்பில் மேற்கொள்ள புலிகள் திட்டமிட்டு, கேணல் சொர்ணம் தலைமையில் தமது படையணிகளை மட்டக்களப்பு திருகோணமலை எல்லையான வெருகலில் குவித்தபோது, கருணா தனது சகோதரர் ரெஜியை வெருகல் பகுதிக்கு அனுப்பி அங்கு தமது அணிகளின் முற்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது வெருகல் பகுதியில் பெருமெடுப்பில் தமது ஆட்களை கொண்டுபோய் நிறுத்திய ரெஜி மற்றும் ஜிம் கெலி தாத்தா, ரொபேர்ட் ஆகியோர், புலிகள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் தமது ஆட்களையும் கைவிட்டு விட்டு ஒரேயடியாக வாகரைப் பக்கமாகப் பின் வாங்கினர். விநோதன் படையணியின் பாரதிதாஸன் படுகாய மடைந்ததுடன் அன்பரசி படையணியின் சாவித்திரி என்பவரும் காயமடைந்து போராளிகள் அனைவரும் புலிகளிடம் சரணடைந்ததால் ரெஜி தலைமையிலானவர்களின் கதி அந்தோ கதியானது. பின்னர் மட்டக்களப்பு புலிகளின் பூரண ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட பின் ,ரெஜி கொழும்புக்குத் தப்பி வந்தார் என அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கருணாவின் நிதிப் பொறுப்பாளராகவிருந்த குகநேசன் உட்பட எண்மர் கொட்டாவ பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர், தென்னிலங்கையில் தமது இருப்பு அபாயகரமானது என்பதைப் புரிந்து கொண்ட ரெஜி மீண்டும் மட்டக்களப்பினுள் ஊடுருவ முயன்றார். அங்கு எல்லைக் காட்டுப் பகுதிகளினுள் ஊடாகச் சென்று ஆயுதக் குழுக்களின் ஒத்துழைப்புடன் புலிகளுக்கு எதிராகஆங்காங்கே தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

அந்த வகையில் காயங் கேணியில் புலிகளின் மட்டு. அம்பாறை மாவட்ட நிர்வாகப் பொறுப்பாளர் பாவா மற்றும் புனர்வாழ்வுத் துறை உறுப்பினர் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம்; புல்லுமலையில் அண்மையில் பெருமெடுப்பில் புலிகளின் காவல் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஆகியவற்றை ஆயுதக் குழுக்களின் உதவியுடன் இவர் மேற்கொண்டிருந்தார் எனத் தகவல்கள் தெரிவித்தன.கடைசிகாலகட்டங்களில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் தமது ஊடுருவல் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாத நிலையில், இவ்வாறான குழப்பம் விளைவிக்கும் சம்பவங்களை மேற்கொள்வதில் ஆயுதக் குழுக்கள் தீவிரம் காட்டி வந்தன.

புலிகளின் முக்கியஸ்தர்களையும் அரசியல் போராளிகளையும் இலக்கு வைத்து இந்த ஆயுதக் குழுக்கள் தாக்குதல்களை மேற்கொண்டு வந்தன.

இதேவேளை, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வவுணதீவில் புலிகளின் அரசியல் பிரிவினருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் சந்திப்பு இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளவரும் புலிகளின் பிரதிநிதிகளை, அரசுடன் இணைந்து செயற்படும் இந்த ஆயுதக் குழுக்கள் இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளக் கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்து தமது கண்காணிப்பைப் பலப்படுத்தியிருந்தனர். இதன் பின்னணியில் புலிகளின் பார்வையில் ரெஜி குழுவினரின் நடமாட்டம் தெரியவே பின் தொடர்ந்து சென்று முற்றுகையிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பின் எல்லைக் காட்டுப் பகுதியினுள் மாதுறு ஓயாவுக்கு அண்மையில் கூடாரம் அமைத்து இருந்த ரெஜி தலைமையிலான குழுவினரை கடந்த திங்களன்று இரவு புலிகளின் ஜெயந்தன் சிறப்புப் படையணியினர் முற்றுகையிட்டனர். தாம் முற்றுகையிடப்பட்டதை உணர்ந்து சுதாகரித்துக் கொண்டு தப்பியோட முயன்றபோது ரெஜி மற்றும் கருணாவின் மெய்ப்பாதுகாவல் பிரிவுப் பொறுப்பாளர் துமிலன், எழிலன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களுடனிருந்த ஏனையோர் காயங்களுடன் தப்பி ஓடிவிட்டனர். இவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கித் தப்பி ஓடினர் என்று புலிகள் அறிவித்துள்ளனர். அப்படியானால், இவர்களுக்கு அங்கு அண்மையில் பாதுகாப்புக்குரிய இடங்கள் இருந்துள்ளன என்பது இங்கு கண்கூடு.

(மாதுறு ஓயாவுக்கு அண்மையில் இராணுவத்தின் பாரிய முகாம் ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.)

சம்பவம் இடம் பெற்ற இடத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் புலிகள் தீவிர தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.

ரெஜி குழுவினர் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திலிருந்து செய்மதித் தொலைபேசி மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள், ஏ.கே47 இரண்டு, பிஸ்டல்கள்3, ஆர்.பி.ஜி1 (இவற்றின் தொடரிலக்கங்கள் அழிக்கப்பட்டுள்ளன.) கடவுச் சீட்டு, தேசிய அடையாள அட்டை ஆகியவற்றைப் புலிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடவுச்சீட்டின் மூலம், கருணா புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் ரெஜி கொழும்பில் நடமாடியுள்ளார் என்பதைப் புலிகள் உறுதி செய்துள்ளனர்.அங்கிருந்த ஏனைய ஆவணங்கள் சிலவற்றின் மூலம் ஆயுதக்குழுக்களின் தொடர்புகள் குறித்த பல முக்கிய விடயங்கள் தெரியவந்துள்ளன.

புலிகளின் குட்டிசிறி மோட்டார் படையணிப் பொறுப்பாளரான கேணல் பானு, அண்மையில் கிழக்கு மாகாண சிறப்புத் தளபதி பொறுப்பை ஏற்றிருந்தார். அவர் பொறுப்பேற்ற கையோடு இடம் பெற்றுள்ள இந்த அதிரடி நடவடிக்கை ஆயுதக்குழுக்களுக்கு நெத்தியடியாக உள்ளதுடன் கருணாவின் கிளர்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் புலிகள் பலமிழந்து விட்டனர். ஆகவே அவர்கள் இப்போதைக்குப் போருக்குப் போக மாட்டார்கள் என்ற நினைப்பிலிருந்த இராணுவம் மற்றும் அரசுக்கும் கூட இடியாக விழுந்துள்ளது. இராணுவ ரீதியாலானதும் புலனாய்வுத்துறை சார்ந்ததுமான புலிகளின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் மெருகேறி வருவதைக் கண்டு பேரின வாதிகள் வாய்பிழந்து நிற்கின்றனர்.

கிழக்கில் தேசியத்தையும் தாயகக் கோட்பாட்டையும் எவ்வித சேதாரமுமின்றிப் பாதுகாக்கும் நடவடிக்கையில் புலிகள் முழு வீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.

அண்மையில் வன்னிக்குச் சென்று தேசியத் தலைவரின் நெறிப்படுத்தல்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்ட மட்டுஅம்பாறை மாவட்ட தளபதி ராம், ஜெயந்தன், படைப்பிரிவுத் தளபதி ஜெயார்த்தன், தளபதி ஜனார்த்தனன் துணைத் தளபதிகள் மற்றும் பிராந்திய பொறுப்பாளர்களுடன் இணைந்து கேணல் பானுவின் வழிநடத்தலின் கீழ் கள நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். காடுகளின் ஊடகத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் ஆயுதக்குழுக்கள் ஊடுருவல்களை மேற்கொள்ள விடாமல் ஜெயந்தன் சிறப்புப் படையணியினர் காடுகளினுள் சல்லடைபோட்டுத் தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

இதேவேளை பொலனறுவ மன்னம்பிட்டி பகுதியில் கடந்த வியாழனன்று இரவு இராணுவத்துக்குத் தகவல் வழங்கிவந்த முக்கிய புள்ளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராஜதுரை என்ற 24 வயதுடைய இந்நபர் முன்னர் விடுதலைப் புலிகள் அமைப்பில் செயற்பட்டார்.

பின்னர் பல முக்கிய தகவல்களுடன் புலிகள் அமைப்பிலிருந்து தப்பிவந்து வவுனியாவில் குட்டி என்ற பெயருடன் இராணுவ ஒற்றராகச் செயற்பட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. 19992000 ஆண்டு காலப் பகுதியில் வவுனியாவில் இடம் பெற்ற புலி உறுப்பினர்களின் கொலைக்கு இவரே காரணம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் இவர் பொலனறுவைப் பகுதிக்குச் சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தெய்வீகன்
" "
Reply


Messages In This Thread
[No subject] - by ஆவி - 09-23-2004, 12:16 PM
[No subject] - by ஆவி - 09-23-2004, 01:08 PM
[No subject] - by tamilini - 09-23-2004, 02:01 PM
[No subject] - by ஆவி - 09-23-2004, 03:39 PM
[No subject] - by cannon - 09-23-2004, 08:55 PM
[No subject] - by kuruvikal - 09-23-2004, 10:25 PM
[No subject] - by tamilini - 09-23-2004, 10:37 PM
[No subject] - by kavithan - 09-23-2004, 11:00 PM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 12:17 AM
[No subject] - by Nellaiyan - 09-24-2004, 12:30 AM
[No subject] - by raahul - 09-24-2004, 05:14 PM
[No subject] - by sOliyAn - 09-26-2004, 03:08 AM
[No subject] - by cannon - 09-26-2004, 01:35 PM
[No subject] - by tamilini - 09-26-2004, 01:57 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)