09-26-2004, 12:04 AM
<b>உளவாளிகளும் உளவு வளையங்களும். </b>
"...தேசத்துரோகத்தின் சூழ்நிலைக்குச் சிக்குண்டு போகும் தமிழர்கள் இறுதியில் அபகீர்த்தியையும், மரணத்தையும் சந்திப்பவர்களாகவே இருந்தார்கள். ஆதலால் வர்த்தப் பிரமுகர்கள் தொடக்கம் அங்காடி வியாபாரிகள் வரை நாடுகளெங்கும் உலாவரும் தமிழர்கள் சுயபுத்தியை இழக்கும் நிலைக்கு ஆளாகாது தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும். தமிழர்கள், தமிழர்களின் உளவுச் சேவையில் பணியாற்றவும் தமிழீழத் தனியரசை பாதுகாக்கும் உளவு வளையங்களை அமைக்கவும், உயரிய தேசப்பற்றுடன் செயலாளிகளாகும் போது தான் சிங்கள உளவு வளையங்களை நொருக்க முடியும்...." உலக நாடுகள் உளவுவேலைச் சதுரங்க ஆட்டத்தில் உளவுத்திறன் எல்லாவற்றையும் பிரயோகித்து வெற்றிகரமாக தம் உளவு வளையங்களை அமைத்து தமது தேசிய நலன்களையும், தேசிய பாதுகாப்பு ஒழுங்குமுறைகளையும் பேணிக்காத்து வருகின்றன.
உளவு வளையங்களை அமைக்கும் நோக்கில் தமது உளவாளிகளைத் திறமையான வீதத்தில் ஈடுபடுத்தி வருகின்றன.
உளவாளிகள் தம் உளவுப் பணிகளின் போது நிலைமைக்கேற்ப திட்டமிட்டு தங்களது உருவச்சாயலை மாற்றிக் கொள்வார்கள்.
உளவுப்பணியை ஆற்ற வேண்டிய பிறநாட்டில் வாழும் உளவாளிகள் அந் நாட்டின் கொள்கைகளுக்கு சார்பானவைகளாகத் தம்மை வெளிப்படுத்துவார்கள். தன் தாய் நாட்டைப் பாதுகாக்கும் உளவுப்பணிக்காகத் தாயகத்துக்கு எதிரான போக்குள்ளவர்களாக வெளிப்படுத்திக் கொள்வார்கள்.
உளவுச் சேவைச் சரித்திரத்தில் சுயரூபங்களை மறைத்துக் கொண்டு வெற்றிகரமாக உளவு வேலைகளில் ஈடுபட்ட மூன்று உளவாளிகளின் உண்மை நிகழ்சிகளை ஆராய்ந்து பார்ப்போம்.
முதலாவது நிகழ்சியாக ஜோமனிய உளவாளியான ஸ்டகபனின் உளவுச்சேவையை இப்பொழுது கவனிப்போம்.
ஜேர்மனி 1863 ஆம் ஆண்டு ஒஸ்ரியாவைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவரத் தீடமானித்தது. அத்தீடமானம் நிறைவேற்ற ஒஸ்ரியாவின் இராணுவ போர்த்திட்டங்கள் பற்றிய இரகசியத் தகவல்களைச் சேகரித்து அனுப்பும் உளவு வேலையை ஸ்டகபர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ் ரீபர் ஒரு அங்காடி வியாபாரி போல மாறுவேடம் தரித்துக்கொண்டு ஒஸ்ரியா முழுவதும் சுதந்திரமாக உலாவந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டார்.
அவர் எப்போதும் இரண்டு பெரிய பெட்டிகளைத் தனது வண்டியில் வைத்திருந்தார். ஒரு பெட்டியில் சமயப் பிரசாரப்புத்தகங்களும், மற்றைய பெட்டியில் பாலியல் சம்மந்தமான படங்களும் நிரம்பி இருந்தன.
மக்கள் சமயத்திற்கோ அல்லது பாலியலுக்கோ பெரிதும் கவர்ந்திழுக்கப்படுபவர்களாக இருக்கின்றதை ஸ் ரீபர் நன்கு அறிந்து இருந்தார்.
ஸ்ரிபர் மக்கள் உளவியலை நுட்பமாகப்பயன்படுத்தி ஒஸ்ரியாவில் உளவு வளையங்களை அமைத்துக் கொண்டார். அவ் உளவு வளையங்கள் மூலம் ஜேர்மனிக்குப் பயன்படக்கூடிய தகவல்களைச் சேகரித்துக்கொண்டார்.
அவர் ஒஸ்ரியாவின் இராணுவப் பலத்தைப் பற்றி பூரணமான அறிக்கையொன்றை ஜேர்மனி அரசுக்கு கையளித்தார். அவர் அறிக்கையில் ஜேர்மனியின் துப்பாக்கிகளுக்கு எவ்விதத்திலும் ஈடுகொடுக்க முடியாதா மிகப்பழைய துப்பாக்கிகளையே ஒஸ்ரியா இராணுவம் இன்னமும் பாவிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
உளவு அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜோமனி அரச உயர் மட்டக்குழு ஜேர்மன் இராணுவத்தளபதி ?மால்டெடுடன்? ஒஸ்ரியா மீதான தாக்குதல் திட்டம் பற்றி ஆலோசனை நடத்தியது. அதனை அடுத்து இராணுவத்தளபதி முழு நம்பிக்கையோடு ஒஸ்ரியாவைத்தாக்கினார்.
1866 ஆம் ஆண்டு ஒஸ்ரியா மீதான தாக்குதல் ஆரம்பித்து ஏழு வாரங்களாகப் போர் நடந்தது. இப் போரின்போது ஒஸ்ரியா 40000 போர் வீரர்களை இழந்தததுடன் ஜோமனியிடம் சரண் அடைந்தது. ஆக ஜேர்மனி 9000 வீரர்களை மட்டும் இழந்து வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றது.
ஜேர்மனியின் வெற்றிக்கு ஸ் ரீபன் உளவுச் சேவை பெரும் பங்காற்றியுள்ளது.
இரண்டாவது நிகழ்ச்சியாக பிரித்தானியாவில் நிறுவப்பட்டு இருந்த ஜேர்மன் உளவு வளையம் தொடர்பாக அறிவோம்.
1910 ஆம் ஆண்டு எட்வேட் மன்னரின் இறுதி மரண நிகழ்சியில் கலந்துகொள்ள ஜேர்மன் அரசு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவொன்று பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்தது.
ஜேர்மன் அரச முக்கியஸ்தர்களில் ஒருவரான கடற்படைக் கப்டன் கலிடோசியம் வீதியில் அமைந்திருந்த சிகை அலங்கரிப்பு நிலையமொன்றுக்கு அடிக்கடி வந்து போனார். ஜேர்மனியர் ஒருவரால் இவ் நிலையம் நடத்தப்பட்டதால் இவ் நிலையம் அந் நாட்டு உளவு அமைப்புடன் சம்மந்தப்பட்டு இருக்கலாம் என்கின்ற சச்தேகம் பிரித்தானிய உளவு அமைப்பான எம்.ஜ..5க்கு இருந்தது.
சந்தேகங்களை உறுதிசெய்வதற்காக கடற்படைக் கப்டனை எம்.ஐ. 5 ஆட்கள் பின்தொடர்ந்து கண்காணித்தார்கள். அவ் நிலையத்துக்கு வரும் கடிதங்கங்கள் யாவும் எம். ஐ.5யினரால் பரிசோதனை செய்யப்பட்டு வாசிக்கப்பட்டன.
எம்.ஐ5 இன் உளவுச் சேவையினரால் சிகை அலங்கரிப்பு நிலையத்தினது மர்மமான நாடகத்தின் திரை நீக்கப்பட்து. அதாவது ஜேர்மனிய உளவுச்சேவைக்கான செயற்திறன் வாய்ந்த அலுவலகமாகச் செயற்பட்டது நிரூபிக்கப்பட்டது.
ஜேர்மன் உளவுச் சேவையின் உள்நோக்கத்தை எம்.ஐ.5யினர் அறிந்தம், அங்கு வந்து செல்பவர்களை உடன் கைதுசெய்யவில்லை. மெதுமெதுவாக எல்லா ஜேர்மன் உளவாளிகள் பற்றிய தகவல்களையும் சேகரித்த பிற்பாடு கைதுகளைச் செய்து அதன் உளவு வளையத்தை சீர்குலைத்தார்கள்.
மூன்றாவது நிகழ்ச்சியாக ஜேர்மனியில் மூன்று வருடங்களாக அமெரிக்க உளவாளியாக வெற்றிகரமாக இயங்கிய எரிக்எரிஸனின் உளவுச் சேவையைக் கண்ணோக்குவோம்.
எரிக்எரிக்ஸன் எண்ணெய் வர்த்தக்ப் பிரமுகராகத் தொழிற்பட்டார். .சுவீடன் நாட்டவரான இவருக்கு ஜேர்மனி மீதான வெறுப்புணர்வு மேலோங்கியிருந்தது.
எரிக்ஸன் ஜேர்மனி மீது வெறுப்புக் கொண்டவராக இருந்ததனாலும் அந்த நாட்டு மொழியை மிகச் சரளமாகப் பேசக்கூடியவராகவும் இருந்தாலும் இவரை அமெரிக்க இரகசியச் சேவையைச் சேர்ந்த 'ஸ்ரென்? தனது உளவுச் சேவையில் சேர்த்துக் கொண்டார்.
அவரின் உளவுப்பணியானது ஜேர்மனியின் எண்ணெய் வழங்கல் சம்மந்தமான முக்கிய தகவல்களை சேகரிப்பதாகவே இருந்தது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக தனது மறைப்பை;பலப்படுத்திக் கொண்டார். அதாவது ? ஹிட்லரின்? புகைப்படங்களைத் தனது அலுவலகங்களிலும் வீட்டிலும் தொங்கவிட்டார். ஜேர்மனியர்களுக்கு சார்பானவராகத் தன்னை அடையாளப்படுத்தி அவர்களுள் ஒருவராகக் கலந்து வாழ்ந்தார்.
ஜேர்மன் எண்ணெயை சுவீடனுக்கு வாங்குவதற்காக எரிக்ஸன் அந்நாட்டின் எல்லாப்பாகங்களிலும் உலாவரத் தொடங்கினார். இச்சந்தர்பங்களைப்பயன்படுத்தி அவர் ஜேர்மனிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளைப் பற்றிய நம்பகமான தகவல்களைப் பெறத் தக்கவோர் உளவு வளையத்தை அமைத்துக்கொண்டார்.
அவர் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அமைந்திருந்த இடங்கள், ஆலைகளுக்கு அண்மித்திருக்கும் நில அமைப்புக்கள், விமான எதிர்ப்புப் பீரங்கித் தளங்கள், இராணுவத்தளங்கள் போன்ற தகவல்களைச் சேகரித்து அமெரிக்க இரகசிய சேவையினரிடம் ஒப்படைத்தார்.
அமெரிக்க இரகசிய சேவையினரின் தகவல்களைப் பெற்றுக் கொண்ட நேச நாடுகள் ஜேர்மன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது விமானத்தாக்குதல்களை மிகப்பெரியளவில் தொடுத்தன. இத்தாக்குதல்களால் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் பெரும் சேதத்திற்கு உள்ளாகின.
சேதத்திற்குள்ளாகிய அலைகளின் திருத்தவேலைகளில் ஒரு இலட்சம் ஜேர்மன் படைவீரர்கள் ஈடுபட்டார்கள். ஜேர்மனியின் எல்லா எண்ணெய் வழங்கும் மூலங்களும் சேதமாக்கப்பட்டதனால் பெரும் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டது.
எண்ணெய் வழங்கும் மூலங்கள் அழிந்ததனால் ஜேர்மனியிடம் புதிய இயந்திரங்களை பரிசோதிப்பதற்கும் விமான ஓட்டிகளைப் பயிற்றுவிப்பதற்கும், டிறக்வண்டிகளை, ஜீப்புக்களை, டாங்கிகளை ஓட்டுவதற்கும் தேவையான எரிபொருள் இல்லாமல் போனது.
எரிபொருள் இல்லாமல் போனதால் இரண்டாம் உலகயுத் தத்தின் இறுதிக்கட்டம் மிக நெருக்கடிகளுக்கு உள்ளானது. இதனால் டாங்கிகளையும், பீரங்கிகளையும் சுடுநிலைகளுக்கு கொண்டுவருவதற்கு குதிரைகளும், கோவேறு கழுதைகளும் பயன்படுத்தப்பட்டன. இவ் மோசமான நிலவரங்களால் 1945 ஆம் ஆண்டு ஜேர்மனி நேசநாடுகளிடம் சரணடைந்தது.
ஜேர்மனி நேசநாடுகளிடம் சரண் அடைவதற்கு எரிக்ஸன் பெருமளவில் பங்காற்றியிருந்தார். ஜேர்மனியின் சரண் அடைவு அவரின் உளவு வேலைக்குக்கிடைத்த வெற்றியாக அமைந்தது.
எரிக்ஸனுடைய புகைப்படத்தையும் அவரது வெற்றிகரமான உளவு நிகழ்ச்சிகளையும் மூன்று உளவாளிகளின் உளவாளிகளின் உளவு வளையங்களையும் தமிழர் தாயகத்தோடு ஒப்புநோக்கின் சிங்கள உளவுச் சேவையினர் உளவு வளையங்களை அமைக்க முயலும் உளவு நுட்பங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாகும்.
ஜேர்மனிய உளவாளியான அங்காடி வியாபாரி ஸ் ரீபர், பிரித்தானியாவில் நிறுவப்பட்டு இருந்த ஜேர்மனிய சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர், அமெரிக்க உளவாளியான எண்ணெய் வர்த்தகர் எரிக்ஸன் ஆகியோர் போலவே சிங்கள உளவு நிறுவனத்தின் உளவாளிகள் நாடுபூராகவும் இயங்குகின்றார்கள்.
சிங்கள உளவு நிறுனத்தின் உளவாளிகள் தமிழர் தாயகப் பகுதிகளில் தேசத்துரோகத்தின் சு10ழ்நிலையை எப்பாடுபட்டாயினும் உருவாக்கும் உளவு உழைப்பிலே செயற்பட்டுவருகின்றார்கள். இவர்கள் சதிவேலைசெய்யும் மூளையுனேயே பணியாற்றுகிறார்கள்.
சுயரூபங்களை மறைத்த படி சிங்கள உளவுச் சேவையினரது உளவாளிகளாக இயங்குகின்றவர்கள் இனங் காணப்படும் போதே அவர்களின் உளவுச் சேவையைச் செயலிழக்கச் செய்யமுடியும்.
ஆவ்வாறு சிங்கள உளவு அமைப்பினது உளவுவளையங்களை இனங்காணும் தமிழர்களின் உளவுச்சேவையானது வலுமிக்கதாக இருந்தால்; அது சிங்கள தேசத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது பலத்திலும், எண்ணிக்கையிலும் குறைந்த தமிழர்களின் பலத்தை பன்மடங்குகளாக்கும்.
தேசத்துரோகத்தின் சு10ழ் நிலைக்குச் சிக்குண்டு போகும் தமிழர்கள் இறுதியில் அபகீர்த்தியையும், மரணத்தையும் சந்திப்பவர்களாகவே இருந்தார்கள். ஆதலால் வர்த்தப் பிரமுகர்கள் தொடக்கம் அங்காடி வியாபாரிகள் வரை நாடுகளெங்கும் உலாவரும் தமிழர்கள் சுயபுத்தியை இழக்கும் நிலைக்கு ஆளாகாது தமிழ் இனத்தைப் பாதுகாக்கும் தமிழ் உணர்வாளர்களாக இருக்கவேண்டும்.
தமிழர்கள், தமிழர்களின் உளவுச் சேவையில் பணியாற்றவும் தமிழீழத் தனியரசை பாதுகாக்கும் உளவு வளையங்களை அமைக்கவும், உயரிய தேசப்பற்றுடன் செயலாளிகளாகும் போது தான் சிங்கள உளவு வளையங்களை நொருக்க முடியும்.
nitharsanam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>