09-25-2004, 10:04 PM
கருணாவின் சகோதரன் ரெஜி உட்பட மூவர் புலிகளின் அதிரடி நடவடிக்கையில் பலியானது தொடர்பாக உண்மைக்குப் புறம்பான பல நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இவ் நாடகங்களை அரங்கேற்றுவதில் தமிழ்த் தொலைக்காட்சியும் , வானொலிகளும் , தமிழ் இணையத் தளங்களும் அடங்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா இராணுவ அதிகாரிகளுக்குமிடையிலான சந்திப்பு வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்னார் தலைவரின் விசேட உத்தரவிற்கு அமைய சிறப்புத் தளபதி ரமேஷ் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
சந்திப்பு நடைபெற்ற இடத்திற்குக் அருகாமையில் ஒரு இடத்திற்கு படையினரின் உதவியுடன் கருணாவின் சகோதரன் ரெஜி வருவதற்கும் தளபதி ரமேஷ் கொல்லப்படவும் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மழை காரணமாகவும் காலநிலை இடம் கொடுக்காத காரணத்தாலும் மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் நின்று சின்னத்தம்பி தலைமையில் ஒரு பிரிவு சிறப்புத் தளபதி ரமேஸ் அவர்களையும் அம்பாறை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன், ஆகியோரையும் கொலை செய்ய அனுப்பப்பட்டது.
இவர்களின் வருகையும் விடுதலைப் புலிகளின் இரகசியமான முன்னேற்பாடான சுற்றிவளைப்பால் காலம் பிந்தியதால் வவுணதீவு யுத்த சூனியப் பிரதேசத்திற்கு அப்பால் மேற்கொள்ளப்பட இருந்த தாக்குதல் தடைப்பட்டது.
சாதகமான பதிலை எதிர்பார்த்த அரசபடையினருக்கு ஏமாற்றம் பதிலாக அமைந்தது. மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் தேசியத் தலைவரின் மதிநுட்பத்தால் அமைக்கப்பட்ட கொமாண்டோக்கள் மேற்கொண்ட தாக்குதலின்போது நால்வர் கொல்லப்பட்டும் ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டார். தலைவரின் மதி நுட்பத்தால் ரமேஷ்சைக்கொல்ல வந்த ரெஜி கொல்லப்பட்டு தளபதி ரமேஸ் பாதுகாகக்கப்பட்டுள்ளார்.
இதனை அறிந்திருந்த நிதர்சனம் செய்திச்சேவை சந்திப்பின் பின்னர் பாரிய திருப்பம் ஏற்படும் என செய்தி வெளியிட்டிருந்தது இங்க குறிப்பிடத்தக்கது.
நண்றி நிதர்சனம்