09-25-2004, 07:47 PM
Quote:கைக்கூ என்றால் என்ன என்று யாராவது விளங்கப்படுத்த முடியுமா?
þ§¾¡ ¯í¸Ù측¸ ź¢Í¾¡....
<b>
ஹைக்கூ பெயர்க் காரணம்</b>
ஆரம்ப காலத்தில் ஹைக்கூ கவிதை ஹொக்கூ என்றே அழைக்கப்பட்டது. பிறகு
ஹைகை என்று திரிந்து ஹைக்கூ என்றாயிற்று. ஹைக்கூ என்றால் அணுத்தூசி
போன்ற சிறிய கவிதை என்று பொருள் கூறுகின்றனர்.
தமிழில் ஹைக்கூ கவிதையானது துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா,
மின்மினிக்கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக
அழைக்கப்படுகிறது.
தமிழக ஹைக்கூ கவிஞர் ஓவியர் அமுத பாரதி ஹைக்கூவிற்கு அருமையான
விளக்கம் அளித்திருகிறார்.
ஐ + கூ = ஐக்கூ (ககர ஒற்று மிகுந்துள்ளது !)
ஐ என்றால் கடுகு, கூ என்றால் பூமி,
கடுகளவு உருவில் சிறியதாக இருந்தாலும் பூமியளவு பரந்த விடயத்தை
உள்ளடக்கியது இந்த ஹைக்கூ கவிதை.
தமிழக பெண் கவி மித்ரா அவர்கள் ஹைக்கூவிற்கு நுண்மான் நுழைபுலம் என்று
பொருள் தருகிறார்.
<b>ஹைக்கூ கவிதையின் அளவு வரையறை </b>
ஹைக்கூ கவிதை என்பது முதல் வரியில் 5 அசையையும், இரண்டாவது வரியில்
7 அசையையும், மூன்றாவது வரியில் 5 அசையையும் தாங்கி நிற்கும் மூன்று வரிக்
கவிதை. அசை என்னும் சொல் ஆங்கிலத்தில் சில்லபிள் என்று அழைக்கப்படுகிறது.
ஜப்பானிய மொழியில் ஒஞ்சி என்றழைக்கப்படுகிறது. ஜப்பானிய மொழியில்
ஒவ்வொரு எழுத்தும் ஓர் அசை என்ற கணக்கில் தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தமிழ் யாப்பிலக்கணத்தில் அசையானது நேரசை, நிரையசை என இருவகைப்படும்.
ஜப்பானிய மொழியின் ஒஞ்ஜி என்பது தமிழில் உள்ள நேரசைக்குச் சமம். ஒற்று
எழுத்துக்கள் கணக்கில் அடங்கா. (இது ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும்
பொருந்தி வரும் விதி!)
ஆரம்ப காலத்தில் இந்த 5,7,5 என்ற அசை அமைப்பு முறையாக கடை
பிடிக்கப்பட்டது. காலப் போக்கில் இந்த 5,7,5 என்ற அளவு கோலைத்
தூர எறிந்து விட்டார்கள்.
தமிழ் அசை மரபின் 5,7,5 என்ற அசை (நேரசை, நிரையசை) வடிவில் அமைந்த
ஹைக்கூ கவிதைகளை ஓவியக் கவிஞர் வெளியிட்டார் (காற்றின் கைகள்)
<b>ஹைக்கூ ஓர் அலசல் </b>
nantri - www.tamiloviam.com

