09-25-2004, 03:27 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>துர்க்கை அம்மன் ஆலய அறங்காவலர் சபை எங்கே?</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>
துர்க்கை அம்மன் ஆலய அறங்காவல் சபை என்ன செய்கிறது?</b></span>
இந்த அறங்காவல் சபை உறுப்பினர்கள் பெயர் என்ன? அதன் தலைவர், செயலாளர் பெயர் என்ன?
இந்த அறங்காவல் சபையின் 2003 ஆம் ஆண்டு வருமானம் என்ன? செலவு எவ்வளவு?
எப்போது கடைசியாக ஆண்டு அறிக்கை வெளியிடப்பட்டது? எப்போது கடைசியாக நிதி அறிக்கை வெளியிடப்பட்டது? வருமான வரித்துறைக்கு முறையாக வருமானவரி பத்திரம் ஆண்டுதோறும் அணைக்கப்படுகிறதா? அர்ச்சனை அபிசேகத்துக்கு பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்கு வரிவிலக்கு பற்றுச் சுPட்டுக் கொடுக்கப்படுகிறதா? இல்ல என்றால் ஏன்? அப்படிப் பெறப்படும் பணம் யார் கைக்குப் போகிறது? தலைமை அர்ச்சகருடைய மாத ஊழியம் எவ்வளவு? தலைமை அர்ச்சகர் பெயரில் இருக்கும் சொத்துக்களின் பெறுமதி என்ன?
தலைமை அர்ச்சகர் பெறும் ஊழியத்தைவிட அதிகமாக சொத்துக்களின் பெறுமதி இருக்கிறதா?
<span style='font-size:25pt;line-height:100%'><b>வன்னிக் குழந்தைகளை பொறுப்பேற்றல்</b></span>
வானொலி மூலம் பலரும் அறிய வன்னியில் வாழும் 10 குழந்தைகளை தனிப்பட்ட முறையிலும் மேலதிகமாக 10 குழந்தைகளை கோயில் அறங்காவல் சபையும் பொறுப்பேற்கும் என்று உறுதிமொழி கூறப்பட்டது.. ஆனால் இந்தக் கொடுப்பனவு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் காரணம் சொல்லப்படாமல் நிற்பாட்டப்பட்டு விட்டது. இது பொது மக்களுக்குத் தெரியாது. பொது மக்கள் இந்த அறக் கொடை தொடர்ந்து கொடுக்கப்படுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிதியுதவியை ஏன் நிறுத்தினீர்கள்? வருவாய் குறைந்து விட்டதா? விலை உயர்ந்த கார்கள் வாங்கப் பணம் இருக்கும்போது இதற்கு மட்டும் பணம் இல்லையா?
<span style='color:blue'><b>பரமார்த்த குருவும் முட்டாள் சீடரும்</b>
நாத்தீகவாதிகள் சைவத்தையும் தமிழையும் அழிக்கிறார்கள் என்று வானொலியில் பேசிய பரமார்த்த குருவும் அவரது முட்டாள் சீடரும் சொன்னார்கள். மெத்தச் சரி. இவர்களும் நாத்தீகர்களா? நட்ட கல்லை சுற்றி வந்து நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொண மொணவென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் சுவை அறியுமோ?
கோயிலாவது ஏதடா? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அறிவதும் இல்லை இல்லை இல்லையே!
(சிவவாக்கியார்)
திருவள்ளுவர்
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்
பரந்து கெடுக உலகியற்றியான (குறள் 1062);
தெய்வத்தான் ஆகாது எனினும், முயற்றிதன்
மெயவருத்தக் கூலி தரும் (குறள் 619)
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் (குறள் 972)
அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான் (குறள் 30)
சைவ நன்மணி நா.செல்லப்பா
சத்துள்ள உணவை வீண் விரயம் செய்தல் தருமம் ஆகுமா?
அபிசேகங்களைச் சிவன் ஏற்றுக்கொள்வாரா? அவருக்கு அபிசேகம் வேண்டி உள்ளதா? பரிசுத்தமாக என்றென்றும் விளங்கும் சிவனுக்கு அபிசேகம் செய்தல் வேடிக்கையாகவும் விசித்ரமாகவும் உள்ளது. கோயிலில் உள்ள விக்கிரகத்துக்கு அழுக்குப் பிடித்தல் கூடும்... அவ்வாறு செய்யப்பட்ட விக்கிரகங்களுக்குப் பாலும் தயிரும் நெய்யும் தேனும் பாலும் கொண்டு அபிசேகம் செய்வதனால் மேலும் அழுக்கு ஏற ஏதுவாகிறது. அதனால் ஆலயச் சுற்றாடலும் மாசுபட்டுத் துர்நாற்றம் வீசுவதைப் பல ஆலயங்களில் காணக்கூடியதாக உள்ளது. எத்தனையோ ஏழைப்பிள்ளைகளுக்கும் மக்களுக்கும் உதவக்கூடிய சத்துள்ள உணவுப் பொருட்களை அபிசேகம் செய்து வீண் விரயம் செய்தல் தருமம் ஆகுமா? சைவ நீதியகுமா? சாதனைக்குரிய தோத்திரமும் சாத்திரமும் - பக்கம் 63)
தன்னிடமே இருந்து வரும் கஸ்தூரியின் வாசனையை எங்கிருந்து வருகிறதென உணராத கவரிமான் அதைத்தேடிப் புற உலகெங்கும் சுற்றி அலைகிறது. நாமும் கவரிமானைப் போல நம்மிடமே மறைந்துள்ள வாசனையை அறியாது கோயில் குளம் ஸ்தலம் தீர்த்தயாத்திரை, சிவனடியார் கூட்டம் என அலைந்து அலுத்து நிற்கிறோம். (மேற்படி பக்கம் 66)
[size=18]<b>மக்களை ஏமாற்றும் பூசாரிகள்</b>
சைவமத குருமார்கள் அநேகமாக ஆலயங்களிலே தான் தொழில் புரிகிறார்கள். அவர்கள் கிரகதோசம் வினைப்பயன் னெ;றெல்லாம் சைவ மக்களிடையே அச்சம் ஊட்டி அவற்றுக்குச் சாந்தி பூசைகள் செய்யும் படி தூண்டுகிறார்கள். அதனால் அவர்கள் அதிகபண ஆதாயம் பெறுகிறார்கள். சிவாலயங்களில் சிறு தெய்வங்களுடைய விக்கிரகங்களும், நவக்கிரகங்களும் கூடப் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. மக்கள் செய்த பாவ குற்றங்களுக்குத் தெய்வங்களும் சிரகங்களும் கொடுக்கும் தண்டனைகளாலேயே துன்பம் அடைகின்றனர் எனும் கொள்கை பலமாகப் பிரசாரம் செய்யப்படுகிறது. சீற்றம் அடைந்த சிறு தெய்வங்களையும் கிரகங்களையும் - விசேடமாக சனி பகவானையும் - பூசைகள், நிவேதனங்கள், அபிசேடங்கள் செய்து சாந்திப்டுத்தித் தமது துன்பங்களுக்கு நிவாரணம் பெறலாம் என மக்களைப் பூசாரிகள் நம்பச் செய்கின்றனர்.
(மேற்படி பக்கம் 82)
திருமூலர்
பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்கும் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமும் ஆம் என்றே
சீர் கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே!
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
தௌ;ளத் தெளிர்ந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந் துய்ம்னினே.
படமாடக் கோயில் பகவற்கொன் றீயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில்
படமாடக் கோயில் பகவற்க தாமே.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்கிகை ஞானமாம்
நூலது அந்தணர் காணும் நுவலிலே.
முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குந் தாய்தன் மணாளனோ டாடிய
சுகத்தைச் சொல்லொன்றாற் சொலலுமா றெங்கனே.
றூன மிலாதார் சடைசிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை
ஞானிக ளாணுலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே.
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வர்
குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடுங் குழிவிழு மாறே.
(திருமந்திரம்)
திருநாவுக்கரசர்
கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
கொங்குதண் குமரித் துறை யாடிலென்
பொங்கு மாகடல் ஒதநீர் ஆடிலென்
எங்கும் ஈசன் எனாதவர்க் கில்லையே.
மகாகவி பாரதியார்
மெல்லப் பலதெய்வம் கூட்டி வளர்ந்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறை
காட்டவும் வல்லீரோ?
‘தமிழ் நாட்டிலே சாத்திரங்களை வளர்க்காமல், இருப்பனவற்றையும் மறந்து விட்டுத் தமிழ்நாட்டுப் பார்ப்பார் பொய்க் கதைகளை மூடரிடம் காட்டி வயிறு பிழைத்து வருகிறார்கள்.’
நன்று புராணங்கள் செய்தார்- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்
கவிதை மிகநல்ல தேனும் - அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்.
ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை
சூத்திர னுக்கொரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரம் சொல்லிடுமாயின் - அது
சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்!
சாத்திரங்கள் பல தேடினேன் - அங்கு
சங்கையில் லாதன சங்கையாம் - பழங்
கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்மைக்
கூடையில் உண்மை கிடைக்குமோ?
வேதங்கள் கோத்து வைத்தான் - அந்த
வேதங்கள் மனிதர் தம் மொழியிலில்லை
வேதங்க ளென்று புவியோர்-சொல்லும்
வெளுங்கதைத் திரளிலவ் வேதமில்லை!
பார்ப்ப னக்குலங் கெடடழி வெய்திய
பாழடைந்த கலியுக மாதலால்
வேர்ப்ப வேர்ப்பப் பொருள் செய்வ தொன்றையே
மேன்மை கொண்ட தொழிலெனக் கொண்டனன்!
முன்னாளில் ஐயரெலாம் வேதம் ஓதுவார்
மூன்று மழை பெய்யுமடா மாதம்
இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார் -இவர்
ஏதுசெய்தும் காசுப் பெறப் பார்ப்பார்
பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்
..................................................................
பிள்ளைக்குப் பூணுhலாம் என்பான் - நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்
[size=20]<b>ஞாபகம் வருதா? ஞாபகம் வருதா? 1997ஆம் ஆண்டு சுப்ரமணியர் தந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதா?</b></span>
நாகநாதர் சுப்பிரமணியம் அல்லது மணி அய்யர் என்பவரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இந்த அர்ச்சகர் துர்க்கை அம்மன் கோவில் அறங்காவலர்களால்; தமிழ்நாட்டில் இருந்து 1997 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் வரழைக்கப்பட்டவர்.
இவரது மாத ஊழியம் 1,260 டொலர்கள் என உடன்பாடு செய்யப்பட்டே அழைத்து வரப்பட்டார். ஆனால் ஒத்துக்கொண்டபடி அவருக்குரிய ஊழியம் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர் நிர்வாகத்துக்கு எதிராகக் காவல்துறையிடம் முறையிட்டார்.
இதனை அடுத்து அவருக்குரிய ஊழிய நிலுவையைக் கொடுத்து முறைப்பாட்டை திருப்பிப் பெற வைத்தார்கள். அவர் இப்போது வேறு கோயிலில் ஊழியம் செய்கிறார்.
இதனால் அறியப்படுவது யாதெனில் தமிழ்நாட்டில் இருந்து அர்ச்சகர்களை கூட்டி வருதும் வந்த பின்னர் ஒப்புக்கொண்டபடி ஊழியம் வழங்காது அவர்களை ஏமாற்றுவது துர்க் கையருக்கு வழக்கமாக இருந்திருக்கிறது. இருந்து வருகிறது.
துர்க்காதேவி இந்து ஆலய தலைமை அர்ச்சகராகவும் இந்து மத பீடாதிபதியும் ஆன இவர்களுக்கு இப்படிச் செய்வது மோசடி இல்லாவிட்டாலும் 'பாபம்' ஆகத் தெரியவில்லையா? இது ஒழுக்கக்கேடு இல்லையா?
<span style='font-size:25pt;line-height:100%'><b>எடுத்ததெற்கு எல்லாம் தட்சணை ஏன்?</b></span>
இந்து மதத்தில் இருந்து சிலர் கனடாவில் கிறித்துவ மதத்துக்கு மாறி விட்டார்கள். மாறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இதற்கான காரண காரியங்களை ஒரு இந்துமத குரு என்ற முறையில் ஆராய்ந்து பார்த்திருக்கிறார்களா?
காரண காரியங்கள் என்னவென்பது சிறு பிள்ளைக்கும் தெரியும். கனடாவில் உள்ள கோயில்கள் எல்லாம் பக்தி வியாபாரம் செய்து மக்களிடம் இருந்து பணம் கறப்பதையே குறியாகக் கொண்டுள்ளன.
மகன்மாரை பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி படிக்க வைத்து உத்தியோகம் பார்ப்பதைவிட ஒரு கோயிலை உருவாக்கிக் கொடுத்தால் இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கலாம் என அர்ச்சகர்கள் கணக்குப் போடுகிறார்கள்.
இந்து அர்ச்சகர்கள் எடுத்தது எல்லாவற்றிற்கும் தட்சணை கேட்கிறார்கள்.
கன்னிகாதானம் செய்தால் தட்சணை
பூப்பு நீராட்டு விழா என்றால் தட்சணை
காது குத்து விழா என்றால் தட்சணை
திவசம் செய்தால் தட்சணை
துடக்குக் கழித்தால் தட்சணை
வீடு குடி புகுந்தால் தட்சணை
பூசை செய்வதற்கு தட்சணை
சாந்தி செய்வதற்கு தட்சணை
பரத நாட்டிய அரங்கேற்றமா தட்சணை
மிருதங்க அரங்கேற்றமா தட்சணை
இப்படி எடுத்ததெற்கு எல்லாம் தட்சணை
அதுவும் கொடுத்ததை தட்சணையாக வாங்குவதில்லை. முதலே சயவந பேசி வாங்கி விடுகிறார்கள்! எதையும் சமூக சேவையாக அல்லது தெய்வ சங்கற்பமாகச் செய்வதில்லை.
அந்தக் காலத்தில் பார்ப்பனர்களுக்கு அறு தொழில் மட்டும் செய்யலாம் என விதி இருந்தது. அதனால் அவர்கள் அறுதொழிலோர் என அழைக்கப்பட்டனர்.
வேதம் ஓதல் ஓதுவித்தல்
யாகம் செய்தல் செய்வித்தல்
பிச்சை எடுத்தல் பிச்சை கொடுப்பித்தல்
இதுவே அந்த அறு தொழிலாகும்.
இந்தக் காலத்தில் கைநிறைய ஊழியம் வாங்குகிற இந்துக் அர்ச்சகர்களுக்கு தட்சணை கொடுப்பதில் நியாயம் இல்லை.
- திருமகன் சுப்ரமணியம், மொன்றியல்
நன்றி
முழக்கம் இணையத்தளம்

[b][size=18]