Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் - வைகோ கடிதம்
#1
<b>அமெரிக்காவில் தவிக்கும் தமிழர்கள் - வைகோ கடிதம்</b>

அமெரிக்காவில் வீசிய கடும் புயலால் பாதிக்கப்பட்டு கிராண்ட் கோமன் தீவுப் பகுதியில் சிக்கித் தவிக்கும் 500 தமிழர்களைக் காக்க மத்திய அரசு விரைவான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

அமெரிக்காவுக்கு அருகே கரிபீய கடல் பகுதியில் உள்ளது கிராண்ட் கோமன் தீவு. இங்கு சமீபத்தில் வீசிய கடும் சூறாவளி மற்றும் புயலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தீவில் 250 இந்தியர் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில் 500 பேர் தமிழர்கள்.

புயல் காரணமாக வீடுகளை இழந்து இவர்கள் தவித்து வருகிறார்கள். உணவு, தண்ணீர் இல்லாமல் இவர்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த அவல நிலை குறித்து தமிழர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வைகோவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ எழுதிய கடிதத்தில், பரிதவிக்கும் தமிழர்கள் மற்றும் இந்தியர்களைக் காக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரினார். மேலும், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு பேசி நிலையை விளக்கினார்.

கோமன் தீவில் வசித்து வரும் கனடா, ரஷியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இதே புயலால் பாதிக்கப்பட்டபோது அந்த நாட்டு அரசாங்கங்கள் மீட்பு உதவியை வழங்கியதை சிங்குக்கு நினைவு கூர்ந்த வைகோ, அதே போல, மத்திய அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்.

இதுகுறித்து ஆவண செய்வதாக தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக வைகோ தெரிவித்துள்ளார்.

thatstamil.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
அமெரிக்காவில் தவிக்க - by kuruvikal - 09-24-2004, 01:22 AM
[No subject] - by tholar - 09-30-2004, 02:34 PM
[No subject] - by Rajan - 10-13-2004, 10:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)