09-23-2004, 03:39 PM
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட கருணாவின் சகோதரன் ரெஜி எனப்படும் விநாயகமூர்த்தி சிவனேசதுரை உட்பட 3 பேர் நேற்றிரவு விடுதலைப் புலிகளின் அதி விசேட கொமாண்டோ படை நடவடிக்கையொன்றின் போது கொல்லப்பட்டுள்ளார்கள். மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட்ட எல்லையில் உள்ள மாதுரு ஓயாவை அண்மித்த காட்டுப் பிரதேசத்தில் இவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட் தாக்குதலின் போதே இவர்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுவர்களில் ரெஜி புளட் அமைப்பில் இருந்து தப்பி வந்து விடுதலைப் புலிகளின் அமைப்பில் இனைந்தவர் கருணா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டபோது அனியினரின் பிரதி தளபதியாகவும் இலங்கை அரச புலநாய்வுப்பிரின் உதவியாளராகவும் செயற்பட்டவர். இவர் யாழ் சுண்னாகம் பகுதியை சேர்ந்த பெண்னை திருமணம் செய்த 3 குழந்தைகளுக்கு தகப்பனார். இவரை மனைவியார் நாசகார வேலைகளை விடுத்து மீன்டும் அமைப்பில் இனையுமாறு மன்றாடியதாக தெரிய வருவதுடன் குழந்தைகளும் தேசவிரோத செயலில் இருந்து தகப்பனாரை ஒதுங்குமாறு பலமுறை மன்றாடி உள்ளனர்.
இவருடைய மனைவியாரின் சகோதரியார் விடுதலைப் புலிகளின் அமைப்பில் அதி விசேட சிறப்புப் படைப்பிரிவுத் தளபதிகளில் ஒருவரான ஆண்டாள் தற்போது தொழில்பட்டுக்கொன்டு இருக்கின்றார். விடுதலைப் புலிகள் மீது அண்மைக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சில தாக்குதல் சம்பவங்கள் ரெஜியின் வழிநடத்தலிலே இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய இருவரில் துமிலன் என்பவர் கருணாவின் மெய்பாதுகாப்பு படைப்பிரிவின் சிறப்பத்தளபதியாக இருந்ததுடன் கருணாவின் மிகவும் நெருக்கிய நண்பன். மற்றும் எழிலன் அமைப்பின் முக்கிய உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கருணாவுடன் வரதறாயப் பெருமாள் தொடர்பு கொன்டு தனது இரங்கலை தெரிவித்ததாக தெரியவருகிறது. இருவரும் ஒரே பிரதேசத்தில் தற்போது தங்கி நிப்பதாக நம்பகரமாக தெரியவருகிறது.

<img src='http://uk.geocities.com/besasuaavi/yarl.jpg' border='0' alt='user posted image'>