09-23-2004, 02:38 PM
tamilini Wrote:Quote:தாயகத்து நாய்கள் எல்லாம்
செல்ல பிராணி கேட்கவிலையே....
நாய்க்கு நாய் எப்படி செல்லபிராணி ஆகும்..?
நாய்க்கு மனிதன் தானே செல்லபிராணி என்றாயே.!
அவர்களை எல்லாம் கண்டவன் தான் நான்...
அடித்து பிடித்து கடித்து சாப்பிடுவார்களே..!
அவர்கள் தானே..!
மோப்பம் பிடித்து குண்டு பிடிப்பார்களே
சொறி "கண்டு பிடிப்பார்களே"
அவர்கள் தானே..!
இப்படி எத்தனை உங்கள் இனத்தவரை பாத்திருப்போம்.
செல்ல பிராணிவேண்டும் என்று சொல்லி விட்டு
உங்கள் இனத்தவரின்
பழைய கதை சொல்லி என்னை ஏமாத்தப் பாக்கிறாய்
பயப்படுத்துகிறாய்..!
எல்லாம் அந்த ஓசி சோறு போடவேண்டும் என்று தானே.
பார்..! மனிதன் போல் வாழ வேண்டும் என்று கதைத்தவுடனே
நீ மனிதன் குணம் பெற்றாய்..!
மனிதனாக வாழும் நான் எத்தனை பாடு படுவேன்....
சொல்லு பார்ப்போம்
மானிடனே.. எம்மவர்கள் அங்கே..
இயங்க முடியாமல் இருக்கிறார்கள்..
நாம் எஜமானாய் வந்த பின்..
முதல் செய்வது அவர்களை
எமமைப்போல் மாற்றுவது...
மானிடரை செல்ல பிராணியாக்கி
நாம் கற்பிக்க வேண்டும் பல பாடங்கள் அவர்க்கு..
ஓசி சோறா நாம் சாப்பிடுகிறோம் சற்று சந்தி..
உனக்கு காவலாளியாய்..
உனக்கு செல்லபிராணியாய்..
உன் பிள்ளைக்கு விளையாட்டு பொருளாய்..
சம்பளமில்லாமல் வேலை வாங்குகிறாய்..
இதில் போடுவது சோறு மட்டும் ...
அளப்பது பெரிய கதை..
மனிதனாக வாழ என்ன கஸ்டம் வந்தது உனக்கு..
நீ எப்படி மனிதனோ அதே போல்
மற்றவனை மதி.. கஸ்டம் என்பது
உன்னை கிட்டவும் நெருங்காது...
உன்னை விட அறிவு குறைந்த நான்..
உனக்கு சொல்லும் முதல் பாடம் இது தான்....!
உங்களவர்கள் என்ன
எங்களவர்களும் தான் இயங்க முடியாமல் உள்ளார்கள்.
ஓரிடத்தில் உங்களின் இனத்தவர்
ஒருவரை கண்டாலே
ஒரு இறுமாப்பு..! ஒரு சவுண்டு..!
அதுக்குள்ளை...எல்லரையும்
மாற்ற போகிறீர்களா....
சிரிப்பாக இருக்கிறது....
மானிடன் என்ன சும்மா லேசுப்பட்டவனா
உங்களிடம் ஓசி சோறு திண்டு வாலாட்ட
செல்ல பிராணி என்று செவி சாய்க்க,,..
காவல் காரன் என்கிறாய்
எத்தனை தரம் கள்வன் போட்ட இறைச்சி துண்டுக்காய்
எங்கள் காலைவாரி விட்டிருக்கிறாய்...
என் பிள்ளையின் விளையாட்டு பொருள் என்கிறாய்..
எத்தனை தரம் எம் பிள்ளைகளை கடித்து குதறி இருக்கிறாய்....
இப்படி உனக்கு எல்லாத்துகுமே விளக்கம் சொல்லலாம்
தின்பது ஓசி சோறு
அதற்கே உனக்கு உவ்வளவு தினாவெட்டு என்றால் எனக்கு..?
மனிதனாக வாழ்ந்தால் தெரியும் உனக்கு..
மனிதனின் கஸ்டம்..
மதித்து பார் மிதித்து செல்வான் மற்றவன்..
நீ சொல்லும் முதல் பாடம்
நான் படித்தது பாலபாடத்தில்.
ஓ..அப்ப நீ.. இப்ப தான் பால பாடம் படிக்கிறாயா..?
நான் பலபாடம் படித்து விட்டேன் கவனத்தில்கொள்......
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]

