09-23-2004, 12:23 AM
டேன்மார்க் நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளை தடைசெய்ய தமிழ் தேசவிரோதிகள் சிலர் திரைமறைவில் முயற்சி மேற்கொன்டு வருகின்றனர். இது பற்றி மெலும் தெரிய வருவதாவது. கடந்த பல வருடங்களாக டென்மாக் நாட்டு மொழில் தாயக விடுதலைப் போராட்டத்தை மிகவும் பொறுப்பு அற்ற விதத்தில் விமர்சனத்திற்கு உள்ளாக்கிவரும் தமிழ் இழைஞர்கள் சிலர் விடுதலைப் புலிகளை தடை செய்யவேன்டும் என பல முறைப்பாடுகளை டென்மார்க் பொலிசாருக்கு கொடுத்து வந்துள்ளதாகவும் தற்போது தாயகத்தில் இருந்து டென்மார்க் வந்திருந்த முக்கியஸ்தர் பாலகுமார் தொடர்பாக தவறான தகவல் கொடுத்துள்ளதுடன் டென்மார்க் பொல்கே கட்சி ஊடாக விடுதலைப்புலிகளை தடைசெய்யுமாறு கோரி உள்ளனர். இந்த கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் விடுதலைப்புலிகளை தடை செய்யவேன்டும் என கோரிக்கை விடுத்தள்ளார். இவர்களின் பின்னனியில் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தங்கத்துரையின் சகோதரர் குமாரதுரையின் குடும்பம் முளுமையாக தொழில்பட்டு வருவதாக தெரியவருகிறது. இவருடைய மகன் மதி என்பவர் மேற்கொண்ட தீவிர முயற்சியினால் டென்மாக் நாட்டு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் விடுதலைப்புலிகளை தடை செய்ய வேன்டும் என கருத்து தெரிவித்துள்ளன. ஆதே நேரம் நேற்றய தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த மதி என்பவர் விடுதலைப்புலிகள் உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக டென்மாக் ஊடகங்களுக்கம் அரசியல் கட்சிகளுக்கும் முறையிட்டுள்ளார்.

