09-22-2004, 11:40 PM
tamilini Wrote:என்ன மானிடா...
ஜரோப்பிய நாய்களை கண்டு..
எம்மைப்போல் வாழ ஆசையா..??
தாகத்தில் சேற்றிலும் குப்பையிலும்..
தேடியுண்ணும் எம்மவர்களை கண்டதில்லையா...
அங்கே ஒரு நாயாக நீ தயாரா..
இங்குள்ள பஞ்சனையும்..
ரெடிமெட் உணவுக்கும் நாயாக விரும்பிறாய்..
சொறியோடும் குட்டையுடனும்..
அல்லலுறும் எம்மவர்களை
நீ காண நேர்ந்தால்
அப்போது யோசிப்பாய்
எங்கள் நிலை.....!
தாயகத்து நாய்கள் எல்லாம்
செல்ல பிராணி கேட்கவிலையே....
நாய்க்கு நாய் எப்படி செல்லபிராணி ஆகும்..?
நாய்க்கு மனிதன் தானே செல்லபிராணி என்றாயே.!
அவர்களை எல்லாம் கண்டவன் தான் நான்...
அடித்து பிடித்து கடித்து சாப்பிடுவார்களே..!
அவர்கள் தானே..!
மோப்பம் பிடித்து குண்டு பிடிப்பார்களே
சொறி "கண்டு பிடிப்பார்களே"
அவர்கள் தானே..!
இப்படி எத்தனை உங்கள் இனத்தவரை பாத்திருப்போம்.
செல்ல பிராணிவேண்டும் என்று சொல்லி விட்டு
உங்கள் இனத்தவரின்
பழைய கதை சொல்லி என்னை ஏமாத்தப் பாக்கிறாய்
பயப்படுத்துகிறாய்..!
எல்லாம் அந்த ஓசி சோறு போடவேண்டும் என்று தானே.
பார்..! மனிதன் போல் வாழ வேண்டும் என்று கதைத்தவுடனே
நீ மனிதன் குணம் பெற்றாய்..!
மனிதனாக வாழும் நான் எத்தனை பாடு படுவேன்....
சொல்லு பார்ப்போம்
[b][size=18]

