09-22-2004, 08:50 PM
<b>குறுக்குவழிகள்-58</b>
<b>Start-up disk என்பது என்ன?</b>
நின்றுபோன கம்பியூட்டரை திருத்தி மீண்டும் இயங்க வைக்கத்தேவையான, கையடக்கமான சில பயன்பாட்டு சிறிய utilities ஐக்கொண்ட விசேஷமான bootable floppy disk என்று இந்த start-up disk ஐ கூறலாம்.
நின்றுவிட்ட கம்பியூட்டரினுள் இந்த start-up disk ஐ செலுத்திவிட்டு கம்பியூட்டரை இயக்கினால் சில விநாடிகளில் மூன்று விருப்பத்தெரிவு திரையில் தெரியும். முதலாவது CD-Rom ஆதரவுடன் கம்பியூட்டரை இயக்கலாமா? இரண்டாவது சிடி-றொம் ஆதரவு அற்று இயக்கலாமா? மூன்றாவது உதவியை வாசிக்கப்போகிறீர்களா? என கேட்கும்.
முதலாவதை தெரிந்துவிட்டு Windows Instalation சீடியை CD-Rom drive இனுள் செலுத்தி ஹாட் டிஸ்க் ஐ partition பண்ணவோ அல்லது ஏற்கனவே c: டிறைவினுள் உள்ள இயங்கு தளத்தை repair பண்ணவோ அல்லது Format பண்ணி அழித்து புதிதாக install செய்யவோ முடியும்.
இரண்டாவதை தெரிவு செய்தால் a:> prompt ல் போய் நிற்கும். இதில் நின்றுகொண்டு இந்த டிஸ்க்கில் உள்ள சிறிய் utilities ஐ பயன்படுத்தி Fdisk, Format, extract, Scandisk, chkdsk, Edit, delete, copy ஆகிய கட்டளைகளை பயன்படுத்தி பல திருத்த வேலைகளை இயங்கு தளத்தை சீர்செய்து வழமைபோல் கம்பியூட்டரை இயக்க வழிசெய்யலாம்.
மூன்றாவதை தெரிவுசெய்து இந்த டிஸ்க்கை பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்ற முழு விபரத்தையும் வாசித்து அறிந்துகொள்ளலாம்.
Windows 95 start-up disk சீடி றொம் ஐஆதரிக்காது, ஆனால் Windows 98 ம் அதன் பின் வந்த Windows 2000. Win XP க்களின் start-up டிஸ்க்குகள் சீடி றொம் ஐ ஆதரிக்கும்.
இயங்காது நின்ற கம்பியூட்டரின் இயக்கத்தை ஆரம்பித்து பின் பொறுப்பை சீடி றொம்மிடம் பாரம் கொடுப்பதுதான் start-up disk க்குகளின் முக்கிய வேலை. பல நேரங்களில் O/S களை இன்ஸ்டால் பண்ணுவதற்கு நாம் சீடி றொம் ஐ அணுகவேண்டும் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.Graphical User Interface புறோகிறாம்களை start-up டிஸ்க்கை பயன்படுத்ததி இயக்கமுடியாது என்பதும் குறிப்பிடதக்கது
சுருங்கக்கூறின் திருத்த வேலைக்காக செல்லும் ஒருவர் தன்னுடன் எடுத்துச்செல்லும் சிறிய கருவிகள் அடங்கிய ஒரு ஆயுதப்பெட்டிதான் இந்த start-up டிஸ்க்.
CD-Rom டிறைவினுள் எந்த சீடியும் இல்லாத வேளையில் இந்த start-up டிஸ்க்கை அதன் டிறைவினுள் நுழைத்து ஆராய்ந்து பார்க்கவும்.கெடுதல் ஏற்படாது. கட்டளைகளை கொடுத்து Enter கீயை தட்டாது பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யின் இருந்ததும் கெட்டுப்போகலாம்