09-21-2004, 02:29 PM
<img src='http://www.kumudam.com/kumudam/27-09-04/8t.jpg' border='0' alt='user posted image'>
சிறுவயதில் அம்மா (?) அல்லது அக்கா போல் பழகும் பெண்ணின் மீது ஏற்படும் ஈர்ப்பு, பிறகு 'பொஸஸிவ்னஸ்' ஆக மாறி, கணவனிடமிருந்து அவளை மூர்க்கமாகப் பிரிக்கும் அளவிற்குப் போகும் விபரீதத்தைச் சொல்லும் கதை.
கத்தி மேல் நடந்திருக்கிறார் இயக்குனர். காயம் படாமல் நடக்க வேண்டும் என்பதற்காக சில விஷயங்களைச் சொல்லாமல் காப்பதுதான் குழப்பமாகிவிட்டது. அவள் மேல் அந்தப் பையன் கொண்டது காதலா? காமமா? ('இல்லை' என்கிறான், ஒரு கட்டத்தில்) பாசமா? வெறியா? தெளிவாகப் புரியவில்லை.
ஹீரோ (புதுமுகம் விஷால்), ரீமா சென், பரத் மூவருமே பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார்கள். தன்னைக் கடத்தி வந்த பரத்திடம் கோபம் கொள்ளாமல் 'ஏண்டா இப்பிடி செஞ்ச மடையா?' என்று உரிமையோடு ரீமா கேட்கும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக விபரீதம் புரிந்து திணறும்போதும் கதை விறுவிறுப்படைகிறது.
கே.வி.ஆனந்தின் கேமிரா புகுந்து விளையாடியிருக்கிறது. கோவா காட்சிகளின் இயற்கையான லைட்டிங்கும், கிளைமேக்ஸ் காட்சியின் சுறுசுறுப்பான படப்பிடிப்பும் காமிராவுக்கு திருஷ்டி போட வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன.
அடுத்து, ஹாரிஸ் ஜெயராஜின் இசை. 'ஆரிய உதடுகள்' காதில் ரீங்காரமிடுகிறது. விஷாலா, பரத்தா, ரீமாவா? யாருடைய கோணத்தில் கதை சொல்லப்படுகிறது என்பது தெளிவாக இல்லாததால் ஆரம்ப ஃப்ளாஷ்பேக் காட்சி சுவாரஸ்யமில்லாமல் போய்விட்டது.
விவேக் காமெடி? ம்...
ஸ்ட்ரோக் வந்து படுத்துக் கிடக்கும் பணக்காரராக கிரிஷ் கர்னார்ட் அருமையாக நடித்திருக்கிறார்.
ரீமாவின் கணவனைப் பிடிக்காமல் பரத் செய்யும் சின்னச்சின்ன சேஷ்டைகளும், பிறகு புத்திசாலித்தனமாக ஒரு கோட்டைக்குள் அவரைச் சிறைப்பிடிக்கும் டெக்னிக்குகளும் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது.
'அவனுக்கு அம்மாவாகும் வயசும் உனக்கு இல்லை. உனக்குப் பிள்ளையாகும் வயசும் அவனுக்கு இல்லை' என்று கடைசியில் ஹீரோ சொல்கிறார். இதுதான் கதையின் பிரதான முரண்பாடு.
இன்கம்டாக்ஸ் ரெய்டு காட்சிகள் புதுசு மட்டுமல்ல, பட்டாசு!
க்ளைமாக்ஸ் விறுவிறுப்பானது. முன்பே யூகிக்கக் கூடியது.
செல்லமே
no
வெல்லமே!
<img src='http://www.kumudam.com/kumudam/27-09-04/8p.jpg' border='0' alt='user posted image'>
றீ கோவா _ பாணாஜி பகுதியில் இதுவரை யாரும் 'ஷ¨ட்டிங் நடத்தியிராத இடங்களைத் தேடி அலைந்து படம் பிடித்திருக்கிறார்கள். தவிர, அங்குள்ள கலெக்டர் அலுவலகத்திலும் படப்பிடிப்பு நடந்திருக்கிறது.
றீ ஹீரோ விஷால், பிரபல தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மகன். இந்தப் படத்திற்காக கூத்துப் பட்டறையில் நடிப்புப் பயிற்சி எடுத்திருக்கிறார்.
றீ'வெள்ளைக்கார முத்தம்' பாடலுக்காக ஒரே ஒரு டவலை மட்டும் கொடுத்து, இரண்டு நாட்கள் கோவாவில் உள்ள ஒரு வீட்டில் கிளாமராக ரீமாசென்னை ஆட வைத்திருக்கிறார் டான்ஸ் மாஸ்டர் தாரா. டவல் அவிழ்ந்து விடாமல் இருக்க நிறைய முன்னேற்பாடுகள் செய்திருக்கிறார்கள்.
றீ'பாய்ஸ்' முடிந்த சமயத்தில் பரத்தை புக் செய்திருக்கிறார்கள். இந்த கேரக்டருக்காக ஒரே மாதத்தில் ஒன்பது கிலோ எடையைக் குறைத்திருக்கிறார் பரத்.
றீதொழிலதிபராக நடித்து இருப்பவர் கிரிஷ் கர்னார்ட். இவர் காதலன் படத்தில் கவர்னராக நடித்தவர். முகம் கோணலாக நடிப்பதற்காக நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறார்.
றீஅந்தமானில் எடுக்கப்பட்ட நீர் அடி காட்சிகளுக்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் கேமிரா கொண்டு வந்து படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த்.
றீமும்தாஜ் சம்பந்தப்பட்ட சீன்களை, அரை நாளில் எடுத்து முடித்திருக்கிறார்கள். இதில் மும்தாஜ் தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
27-09-04
Thanks © Kumudam

