09-20-2004, 04:15 PM
tamilini Wrote:<img src='http://p.webshots.com/ProThumbs/3/43203_wallpaper110.jpg' border='0' alt='user posted image'>
அன்பே நீ வாழ
அரண்மனை அமைத்து..
அங்கே நான் உனக்கு காவலனாய்..
சொன்னதை செய்திட ஒரு
சேவகனாய்...
நாளை நான் உனக்கு
கணவனாய் வருவேன்
என்ற நம்பிக்கையில்
இப்போ பு}வே நீ புன்முறுவல்
செய்தால் போதுமடி...
என் ஜீவன் வாழுமடி....!
காதலா நீ எனக்கு
கோட்டையும் வைக்க வேண்டாம்
காவலும் இருக்க வேண்டாம்
சேவகமும் செய்ய வேண்டாம்
தாலி தரும் கணவன் எனும்
போலி ஆசையும் வைக்க வேண்டாம்
நான் நானாயும் நீ நீயாயும்
நாமே நமக்காக
வேசமின்றி பொய்களின்றி
காலமெல்லாம் அளவில்லா அன்பு
கணமும் பகிர்ந்து
வாழும் வாழ்வே வேண்டும்...!
அதற்காய் கேள் பரிசு
என் உயிரென்றாலும் தருகிறேன்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

