07-21-2003, 09:52 AM
இப்ப முக்கிய பிரச்சினை ஏன் அடக்கப்பட வேண்டும் என்பது....
பெண்கள வீட்டுக்குள் பூட்டி வைத்த காலம் இருந்தது என்பதை யாவரும் அறிவர்...
அவர்கள் இப்பொழுது வெளியில் வந்து கல்வி பெற்று தொழில் செய்து சமுகக் கடமைகளில் பங்கேற்று வருகின்றனர்...இதுவும் யாவரும் அறிந்ததே..
எங்காவது புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவரையோ அல்லது ஓரளவு வேலை தெரிந்த ஒருவருக்கோ அதிகாரங்களையும் பொறுப்பபையும் கையளிப்பதில்லை.... இது யதார்த்தம். அதே நேரம் அவ்வேலையை திறம்பட செய்பவருக்கே அப்பொறுப்பும் அதிகாரமும் கையளிக்கப்படும்!
இவ்வளவு நாளும் நான் சொன்னது புரியவில்லை என்றால் மேலே குருவியண்ணை தந்த இணைப்பை சொடுக்கி அந்த 5 பக்க ஆராய்ச்சிக் கட்டுரையை ஆற அமர இருந்து வாசியுங்கள்.....அந்த முடிவுகளுக்கு வந்ததில் சிலர் பெண் விஞ்ஞானிகள் என்பதையும் கருத்திற்கொள்ளுங்கள்! (பிறகு ஆண்கள் எடுத்த முடிவு என்று சொல்லுவியள்)
ஆணின் உடலமைப்பும் மூளையமைப்பும் தலைமைத்துவப் பண்பை காட்டி நிற்கின்றன.. இதனால் இன்று நேற்று மட்டுமல்ல என்றுமே மேலாதிக்கமும் தலைமைத்துவமும் ஆணிண் கைக்கே உரித்தான பண்புகள்....
இருந்தாலும் மனிதனின் பகுத்தறிவினால் மனித உரிமைகளும் மனித நேயமும் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே பெண்களுக்கும் அவ்வுரிமைகளை (தலைமைத்துவமும் சமுகப்பொறுப்புகளும்) கொடுக்க முன்வந்துள்ளோம்...
ஆனால் இத்தகைய பண்புகளைக் காட்டுவதற்கு எமது (பொதுவாக தெற்காசிய) பெண்களுக்கு அறிவும் ஆளுமையும் சமுகப்பொறுப்புணர்வும் காணாது! இதற்கு சான்று பகரத்தானே அன்னை இந்திரா எமது சிறிமா மற்றும் சந்திரிக்கா, செல்வி ஜெயலலிதா....அடுக்கிக்கொண்டே போகலாம்....(இதை ஏற்றுக்கொள்ளவிட்டால் யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட வாதம் உங்களுடையது...தொடர்ந்நது பயனில்லை)
இந்நிலையில் ஒரு தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒரு சமுகம் இயங்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது!....இங்குதான் ஆணிண் கட்டுப்பாட்டுக்குள் பெண் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.....
உங்கள் ஆதங்கம் ஏன் மேற்கத்தேய பெண்கள் போல் எம்பெண்களும் இருக்க முடியாது என்று.... புலம்பெயர்ந்த உங்களுக்கு எமது அரசின் பொருளாதார அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டுதான் இவ்வகையான எண்ணங்கள் தோன்றுகின்றனவோ? பெண் விடுதலை பேசுவோர் தனிய பெண்களின் உரிமை பற்றி மட்டும் சிந்தித்து பலனில்லை. ஒரு சமுகத்தின் அரசியல் பொருளாதார நிலைகளையும் சிந்திக்க வேண்டும்.
எங்கள் அரசிடம் போதிய பணம் இருக்கா? இங்கு ஒரு மனிதன் அரசின் குழந்தை...ஆனால் இலங்கையில்???....இலங்கையில் களவு கற்பழிப்பு கொலை கொள்ளை மேற்குலகுபோல் வெகுவாக குறைந்து விட்டனவா? சட்டதிட்டங்கள் சிறப்பாக வகுக்கப்பட்டுள்ளனவா?
எம்பெண்களின் பாதுகப்பும் எமது சமுகத்தின் அமைதியான வளர்ச்சியையும் கருத்திற்கொண்டே பெண் ஆணிண் கட்டுப்பாட்டில் இயக்கப்பட வேண்டியவள் என்கிறோம்....புரிந்தால் சரி...
அதுசரி இவ்வளவு விவாதித்த நீங்கள் பெண் விடுதலையின் அடிப்படையை அரசியல் சமுக பொருளாதார பின்னணி கொண்டு முன்வைத்தீர்களா? வெறுமனே பெண்விடுதலை என்று கோசமிடுவதும் நாம் விளக்கம் தந்தால் அடக்குமுறை அடாடவடித்தனம் என்று முறையிடுவதும் ஆரோக்கியமான வாதமாக நான் கருதவில்லை...கொஞ்சம் சிந்தித்து விஞ்ஞான பூர்வமாகவும் அரசியல் சமுக பொருளாதார பின்னணியுடன் உங்கள் பிரச்சினையின் நியாயத்தை ஆராய்ந்து முன்வையுங்கள்!