09-15-2004, 07:29 PM
<b>குறுக்குவழிகள்-57</b>
Hub, Switch, and Routers
<b>Hub</b> என்பது மிகவும் எளிய, மலிவான, சிறிய, நெட்வேர்க் இணைப்பிற்கு தேவைப்படும் ஒரு சாதனம். வரும் தகவல்களை தனது port களோடு இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களுக்கு திருப்பிவிடும் எளிய வேலையை மாத்திரம் செய்கின்றது. ஒரு மின்சார Multi-plug போல இது வேலை செய்கிறது. Hub ஆனது என்ன தகவல் கம்பியூட்டர்களுக்கு போகிறது என அறிவதில்லை. Hub உடன் இணைக்கப்பட்டிருக்கும் எந்த ஒரு கம்பியூட்டரும் மற்ற கம்பியூட்டருக்கு என்ன போகிறது என அறிந்துகொள்ளும். ஏனெனில் ஒரே மாதிரியான தகவல்கள் எல்லா கம்பியூட்டர்க்ளுக்கும் போவதால். பல வருடங்களாக கம்பியூட்டர்களை இலேசில் இணைக்கக்கூடிய ஒரு சாதனமாக இது பயன்பட்டது.
<b>Switch</b> என்பது Hub செய்த வேலையையே ஆனால் திறமையாக புத்திசாதுரியமாக செய்கிறது. தனது எந்த port உடன் எந்த கம்பியூட்டர் இணைக்கப்பட்டிருக்கின்றது என சரியாக தெரிந்து வைத்திருப்பதால் வெளியில் இருந்து வரும் தகவல்களை உரிய கம்பியூட்டர்களுக்கு அனுப்பும் திறமையை இது பெற்றிருக்கிறது. அதுபோல் தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்கள் அனுப்பும் தகவல்கள் எந்த கம்பியூட்டரில் இருந்து வருகிறது என பிரித்து அறியும் தன்மை கொண்டது.
<b>Router</b> என்பது மூவரிலும் அதி புத்திசாலி, விலைகூடியது. பிரபல்யமான நான்கு port உள்ள சிறிய router இலிருந்து இணையத்தை இயக்குகின்ற மிகப்பெரிய அளவுவரை பல வடிவங்களில் உற்பத்தியாகின்றன. இதை ஒரு விசேஷ புறோகிறாம் நிறுவப்பட்ட கம்பியூட்டருக்கு ஒப்பிடலாம். டேட்டாக்களின் தன்மைகளை விளங்கி, தரம்பிரித்து உரிய தொலைதூர கம்பியூட்டர்களுக்கு நிலைமைகளை அனுசரித்து அனுப்பக்கூடிய புறோகிறாம்கள் இவைகளில் நிறுவப்படுகின்றன. Firewall களின் உதவியோடு வெளியிலிருந்து வரும் தாக்குதல்களிலிருந்து தன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் கம்பியூட்டர்களை பாதுகாக்கவல்லவை.
தன்னுடன் இணைக்கப்பட்ட கம்பியூட்டரிலிருந்து புறப்படும் தகவல்களை, மிகத்தொலைவில் உள்ள இன்னொரு கம்பியூட்டருக்கு, அதற்குரிய திசையையறிந்து அனுப்பவல்லது. அனுப்பும்வழியில் நெருக்கடியிருந்தால் திசையைமாற்றியனுப்பும் வல்லமையும் கொண்டது. ஒரு தபாலை நாம் பெட்டியில் போட அது தபாற்கந்தோரில் பொதியிடப்பட்டு, இன்னொரு கந்தோருக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ர்யில் மூலமோ அல்லது விமானமூலமோ இன்னொரு கந்தோரையடைந்து கடைசியாக எம்மை வந்தடைகின்றது. அதுபோலவே நாம் அனுப்பும் தகவல்களும் பொதிகளாக்கப்பட்டு (data package) அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு router களையும் ஒவ்வொரு தபாற்கந்தோர்களுக்கு ஒப்பிடலாம். Router க்ளின் புறோகிறாம்களை Post Master க்கும் அவரது உதவியாட்களுக்கும் ஒப்பிடலாம். Router சம்பந்தமான மேலதிக தகவல்களை அறியவிரும்பினால் கீழ்க்காணும் லிஙை கிளிக்பண்ணவும்.
http://computer.howstuffworks.com/router.htm