07-21-2003, 12:08 AM
Alai Wrote:ஆண் ஆண்தான்.
அவனுக்கு ஒரு பெண் மீது சட்டங்கள் போட எந்த உரிமையும் இல்லை.
நீதவான் ஒரு பெண்ணாக இருக்கும் பட்சத்திலும் ஆணின் குற்றத்துக்குத் தக்க தண்டனை வழங்க அவளுக்கு உரிமை உண்டு.
தாயின் அறிவுரை மகனுக்கும் மகளுக்கும்தான்.
மகனும் சமுதாயத்தில் ஒரு ஆண்தானே?! வருங்காலத்தில் ஒரு பெண்ணின் கணவன்தானே?!
இன்றுள்ள ஆணும் யாரோ ஒரு பெண் பெற்ற மகன்தானே? தொட்டில் பழக்கம் சுடுகாடு என்கிறார்களே.. தொட்டிலில் மகனுக்கு நல்ல சிந்தனைகளைப் போதிக்க ஒரு பெண்ணால் ஏன் முடியாமல் போனது?
மேலே ஆண்களுக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளில் பல மிகைப்படுத்தப்பட்டனவாகவே தோன்றுகிறது.. சிலவற்றை செய் எனப் பெண்கள் பணிக்கப்படுகிறாள்.. உதாரணமாக விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு தேனீர் வழங்க மனைவியை நாடும் கணவன்மார் நிறையவே உண்டு.. ஆனால் கர்ப்பிணிகளை சித்திரவதை செய்தல்.. கொடுமை செய்தல் என்பன ஏதோ ஆயிரத்துக்கு ஒன்று இரண்டாகத்தான் நிகழ்கிறது.. இவற்றை ஆண் சமுதாயத்துக்கே உரித்தாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.. இவற்றை ஒரு சம்பவமாக அல்லது விதிவிலக்காகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். தந்தை மகனை கண்டிப்பது தந்தையின் அடக்குமுறை ஆகாது.. அது அன்பினாலும் பாசத்தாலும் உரிமையாலும் விளைவது.. இதைப்போல சில சமயங்கள் கணவன் மனைவி இடையேயும் கண்டிப்புகள் கட்டுப்பாடுகள் இடம்பெறலாம்.. ஆகவே எல்லாவற்றையும் அடக்குமுறை எனப் பார்க்க முடியாது.. அதற்காக அடக்குமுறை இல்லை என சொல்ல வரவில்லை.. ஆனால் அடக்குமுறை வெகுவாகக் குறைந்து.. ஏதோ சிலரிடம்தான் உள்ளது.. அதை ஆண்கள் சமுதாயம் என்றோ வர்க்கம் என்சோ வகுத்து.. குடும்பக் குலைவுகளுக்கு ஏதுவாக இல்லாமலிருந்தால் கருத்துகள் கனமாகும்..
.

