09-14-2004, 12:21 AM
<b>சாமி அருளியதிலிருந்து</b>
Quote:கோவில் வருமானங்களை வங்கிகளில் இட்டால் அதற்கு அரசாங்கத்திற்கு வரி கட்ட வேண்டும் என்பதால் இந்தக் கோவிலில் இருந்த கணக்காளரே பணத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்கின்றார். கொண்டு செல்லப்படும் பணம் உடனடியாகவே வட்டிக்கு கொடுக்கப்பட்டு அதில் வரும் வருமானத்தினை இக்கணக்காளரே எடுத்துக் கொள்கின்றார். பொதுப்பணம் இப்படி ஒருவரால் வட்டிக்கு கொடுக்கப்பட்டு கணக்காளர் அதன் வருமானத்தினை எடுப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?தான் வட்டிக்குக் கொடுப்பது கடவுளுக்குத் தெரியவா போகின்றது என்ற துணிவாக இருக்கலாம். மற்றது வட்டியையும் கோவிலுக்கா கொடுப்பது? கொடுத்தாலும் கணக்காளர்தானே வீட்டுக்குக் கொண்டுபோகவேண்டும். ஏன் இரண்டு கணக்கு ஒரே கணக்காக இருக்கட்டுமென்று எண்ணுகிறாரோ என்னவோ!கணக்காளர் மக்களுக்கும் கணக்குவிடுவார் போலிருக்கிறது.
-

