09-13-2004, 10:50 AM
<b>கந்தளாயில் காவலரண் மீது தாக்குதல்: இராணுவ அதிகாரி பலி </b>
திருகோணமலை கந்தளாய் பகுதியில் உள்ள 92ஆம் இலக்க பொலிஸ் காவலரணுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர் இராணுவ அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படையினருக்கும் வான் ஒன்றில் பயணம் செய்தவர்களுக்கும் இடையே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
வானில் பயணித்த ஒருவர் ஊர்காவல் படை வீரரிடமிருந்து துப்பாக்கியை பறிக்க முயற்சித்த போதே பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தையடுத்து திருகோணமலை நோக்கிச் சென்ற வான் தொடர்பாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறிய பொலிசார், வானைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
puthinam.com

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>