09-12-2004, 06:09 PM
<span style='font-size:23pt;line-height:100%'>நான் நினைக்கிறேன் நீங்கள் தற்போது நன்றாக துன்பங்கள் இன்றி வாழ்கிறீர்கள்... அது தொடர வேண்டும் என்பது தான் எனது ஆசையும்.. ஆனால் ஒருவனுக்கு எப்போது துன்பம் நேருகிறதோ அந்த நேரம் தான் அவன் கடவுளை நாடுகிறான்.... அது வரைக்கும் கடவுளும் இல்லை மண்ணாங்கட்டியும் இல்லை இது எல்லாம் சுத்த மடைத்தனம் என சொல்லி கொண்டிருக்கிற பலர் பின்னர் கடவுள் தான் உலகமே என மாத்தி சொல்வதை எத்தனையோ இடங்களில் பார்த்திருக்கிறேன்.. .... இதனை நீங்களும் ஒரு நாளைக்கு உணர்ந்தால் நினைத்து பாருங்கள்......... கடவுள் என்பது எனது அல்ல அது உலகம் முழுவதற்கும் பொதுவே.... ஆனால் ஒவ்வொருவரும் தமக்கு விரும்பிய வடிவங்களில் கடவுளை காண்கிறார்கள்... அது அம்மாவாகவும் இருக்கலாம், அப்பாவாகவும் இருக்கலாம், மரமாகவும் இருக்கலாம், கல்லாகவும் இருக்கலாம், அது அது அவரவர் மனதை பொறுத்ததே.. ..</span>
[b][size=18]

