09-08-2004, 04:21 PM
<b>இந்த அடி போதுமா ...? இன்னும் கொஞ்சம் வேணுமா...? </b>
அது என்னமோ தெரியாது ரணில் திடீரென இப்போது அனுபவம் வாய்ந்த இராஜதந்திரியாக தன்னை இனம் காட்டத்தொடங்கிவிட்டார். என்றே கூறவேண்டும்.
தேர்தல்களில் ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பலமான அடியால் துவண்டு போகது பலவீனமான புதிய ஆட்சிக்கும் பலமிருந்தும் பதற்றத்துள் சிக்கி தடுமாறும் சனாதிபதிக்கும் ?இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? என்று கேட்குமா போன்று அண்மைக்காலத்தில் சில அசத்தலான அரசியல் அதிரடிகளை வழங்கத் தொடங்கியுள் ரணில் இப்பொழுது கொஞ்சம் துணிச்சலாகவே (இதைவிட வேறு வழியுமில்லை) சில கருத்தக்களை காலநேரவர்த்தமானம் பார்த்து வெளிப்படுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
?தமிழீழ விடுதலைப்புலிகள் சமர்பித்த இடைக்கால நிர்வாக அதிகார சபையின் அடிப்படையில் பேச்சுக்களை ஆரம்பிக்க அரசு தயாரா? இல்லையா என்பதை அரசாங்கம் அதளிவாக உறுதியாக தெளியப்படுத்த வேண்டும்? என்று சனாதிபதியிடம் கோரியிருப்பது அரசுக்குள் நெருக்கடியை அதிகப்படுத்தும் விடயமாகும்.
இதற்கு சனாதிபதியால் ஆம் என்றும் கூறமுடியாது இல்லை என்றும் கூறமுடியாது. ஆம் என்றால் அரசுக்குள் குழப்பமுண்டாகும். ஜே.வி.பி துள்ளும், ஹெல உறுமய கூச்சலிடும், பேரின வாதிகள் கண்டனம் தெரிவிப்பார்கள். ஏற்கனவே பலவீனமான நிலையில் அறுதிப்பெரும்பாண்மையை நிரூபிக்க முடியாது தடுமாறும் அதனைப் பாதுகாக்க போராடும் சனாதிபதியும் இதற்கு ஒப்புக் கொள்வதென்பது உடனடிசாத்தியமற்ற விடயமே...!
சரி. இல்லை முடியாது என்று கூறலாம் என்றால் அதுவும் முடியாது இல்லையென்றால் சமாதானப் பேச்சுக்கள் முறிவடையும், போர் நிறுத்தம் பாதிப்புக்குள்ளாகும்.... சர்வதேச சமூகங்கங்களின் அழுத்தங்களைச் சந்திக்க நேரிடும். கடன் வழங்கும் நாடுகள் கைவிரித்து விடும், மீண்டும் போர் மூள்வதை தவிர்க்க முடியாது போகலாம்....!
சனாதிபதியால் அதாவது சர்வவல்லமை பொருந்திய சந்திரிக்காவால் அவரது நிறைவேற்று அதிகார மந்திர சக்தியால் தீர்வுகாண முடியாத கேள்வியாக ரணிலின் வினா விழுந்துள்ளது. ரணில் அத்துடன் விடவில்லை விடுதலைப்புலிகளின் இ. நி. அ சபைத்திட்டத்தின் அடிப்படையில் பேச அரசு தீர்மானித்தால் அதற்கு ஆதரவளிக்கத் தயார் என்றும் கூறி சாதாரண சிக்கலை இடியப்பசிக்கலாக்கிமெல்லவிட்டார்.
இனப்பிரச்சினைக்கு ஆளும் கட்சியும், அதாவது சனாதிபதியும், எதிர்கட்சியும் அதாவது ரணிலும் இணைந்து தீர்வுகாண கிடைக்கும் ஒரு அற்புத வாய்ப்பு இதுவென்றே சர்வதேச சமூகம் சந்திரிக்காமீது அழுத்தம் கொடுக்கப்போகிறது...
ரணில் சந்திரிகாவை ஒரு பொறிவலைக்குள் சிக்க வைத்துவிட்டாரே...!
செங்குட்டுவன் ஈழநாதம்

<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>