09-07-2004, 04:16 AM
[u][b]<span style='font-size:30pt;line-height:100%'>வெள்ளிக் கிரகத்தால் சூரிய கிரகணம் </span>
<img src='http://www.mayuranet.com/essay/aanmeegam/venusEclipse/index.1.jpg' border='0' alt='user posted image'>
.
<span style='font-size:23pt;line-height:100%'>
சூரியனுக்கும் பூமிக்குமிடையில் சந்திரன் வரும் பொழுது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் பூமி வரும்பொழுது சந்திர கிரகணமும் ஏற்படுவதை நாம் அடிக்கடி காண்கின்றோம். ஆனால் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வேறு கிரகங்கள் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. கடந்த 122 ஆண்டுகளுக்குப் பின்னர் சூரியனுக்கும் பூமிக்குமிடையில் வெள்ளிக் கிரகம் அதாவது வீனஸ் தனது சுழற்சிப் பாதையில் செல்லும்போது சூரியன், பூமி மற்றும் வெள்ளி கிரகங்கள் என்பன ஒரே நேர்காட்டில் வருவதனால் ஏற்படும் சூரிய கிரகணம் எதிர்வரும் ஜுன் மாதம் எட்டாம் திகதி மட்டக்களப்பு நேரப்படி சரியாக காலை 11மணி 15நிமிடம் 01வினாடி தொடக்கம் நடைபெற இருக்கின்றது. இது ஏறக்குறைய 6 மணித்தியாலங்கள்வரை நீடிக்கும். வெள்ளிக் கிரகத்தினால் ஏற்படும் கிரகணம் ஜுன் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்களிலோ மட்டும்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம். இக்கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தில் சூரியனின் மையத்திலிருந்து ஒரு மணித்தியாலத்திற்கு 4றேடியன் என்னும் வேகத்தில் கடக்கவுள்ளது. கிரகணம் ஆரம்பமாகும்போது மட்டக்களப்பில் சூரியன் மேற்குத்திசையில் 64பாகை உயரத்தில் தென்படும். மட்டக்களப்பில் அன்றைய தினம் சூரியன் பிற்பகல் 5மணி 57 நிமிடம் அளவில் மறையும். எனவே முழுக் கிரகணத்தையும் பார்க்கக்கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைக்கும். இதேவேளை வட அமேரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவின் மேற்குப் பகுதியல் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே சூரியன் உதிக்கின்றது. ஆதனால் கிரகணத்தின் கடைசி ஓரிரு மணித்தியாலங்களையே அங்குள்ளவர்களால் பார்க்க முடியும். அவுஸ்திரேலியாவின் கிழக்குப்பகுதி, தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகிய பகுதிகளில் கிரகணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே சூரியன் மறைந்து விடுகின்றது. எனவே அங்குள்ளவர்களால் முதல் இரண்டு நிமிடங்களை மாத்திரமே காண முடியும். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ளவர்கள் எம்மைப்போல் இக்கிரகணத்தை முழுமையாகக் காணலாம். எனினும் நிய10சிலாந்து, ஆஜன்டீனா மற்றும் ஹவாய் தீவுப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு கிரகணம் நடைபெறும் தருணம் இரவு நேரமாகையால் அவர்களுக்கு இதனைக் காணும் வாய்ப்பு கிடைக்காது.
1608ஆம் ஆண்டு தொலைநோக்கி கருவி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் 1631, 1639, 1761, 1769, 1874 மற்றும் 1882 ஆகிய ஆண்டுகளில் மாத்திரமே ஆராய்ச்சியாளர்களால் இக்கிரகணம் பற்றி பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெள்ளிக்கிரகத்தினால் ஏற்படும் சூரிய கிரகணம் நிகழும் காலம் ஓர் முறையான சுழற்சி முறையில் நடைபெறுகின்றது. முதலாவது கிரகணம் நடைபெற்று 8 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றும், அடுத்த 105.5 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்னொன்றும், அதனைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றும் அடுத்து 121.5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒன்றுமாக இச்சுழற்சி தொடர்கின்றது. இவ்வருடம் ஜுன் மாதம் நடைபெறும் கிரகணத்தைத் தொடர்ந்து அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 6ம் திகதி நடைபெறவுள்ளது. புதன் கிரகமும், வெள்ளிக் கிரகமும் பூமியை விட சூரியனை வேகமாகச் சுற்றுகின்றன. அத்துடன் அவை பலமுறை பூமிக்கும் சூரியனுக்குமிடையில் வந்து போகின்றன. வெள்ளிக் கிரகம் ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுக்கும் காலம் 227.4 நாட்கள்தான். எனினும் நாம் பூமியில் இருந்து பார்க்கும் பொழுது இவை சூரியன் இருக்கும் நேர்கோட்டிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கின்றன. இதற்குக் காரணம் வெள்ளிக் கிரகம் பூமியின் சுழற்சிப் பாதையிலிருந்து 3.4பாகை விலகிச் செல்வதுதான். எனவேதான் ஒவ்வொரு முறையும் இவற்றால் கிரகணம் ஏற்படுவதில்லை. 2004ஆம் ஆண்டில் நடைபெறும் கிரகணத்தின் போது வெள்ளிக் கிரகத்தின் நிழல் சூரியனின் வடதுருவத்தினு}டே செல்லும் அதேவேளை 2012ஆம் ஆண்டு நடைபெறும் கிரகணத்தின் போது இக்கிரகத்தின் நிழல் சூரியனின் தென்துருவப் பகுதியூடாகச் செல்லும்.
இக்கிரகணத்தைச் தமக்குச் சாதகமாக்கி பல விடயங்களை அறிய முற்பட்டுள்ளார்கள் விஞ்ஞானிகள். சூரியனுக்கும் பூமிக்குமிடையில் உள்ள து}ரத்தையும், மற்றும் வெள்ளிக் கிரகத்தின் விட்டத்தையும் ஓரளவு துல்லியமாகக் கணிப்பிடவும், எமது சூரிய குடும்பத்தில் மேலும் கண்டறியப்படாத கிரகங்கள் இருக்கின்றனவா என ஆராயவும் இக்கிரகணம் வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு கணிசமான அளவு உதவி புரியவுள்ளது. Edmund Halley என்பவர்தான் வெள்ளிக் கிரத்தினால் ஏற்படும் கிரகணத்தின்போது கெப்லரின் மூன்றாவது விதியைப் பயன்படுத்தி சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான தூரத்தைக் கணிக்கலாம் என கண்டறிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பூமியின் வளிமண்டலத்தில் ஏற்படும் ஒளிமுறிவு காரணமாக இம்முறையைக் கொண்டு து}ரத்தைக் கணிப்பது சிரமமாகவே இருந்து வருகின்றது.
இக்கிரகணத்தைப் பார்க்க விரும்புபவர்கள் அதற்கென விசேடமாகத் தயாரிக்கப்பட்ட தொலைநோக்கியினூடாக மாத்திரமே பார்த்தல் வேண்டும். சூரியனை வெற்றுக் கண்ணால் பார்ப்பதோ, அல்லது சாதாரண தொலைநோக்கியூடாகப் பார்ப்பதோ கண்களுக்குத் தீங்கை விளைவிக்கலாம். சாதாரண தொலைநோக்கியிலுள்ள குவிவு வில்லைகள் ஒளிக்கிரணங்களின் செறிவை அதிகப்படுத்துவதால், அதன் தாக்கத்தால் கண்கள் பர்வையை இழக்கவேண்டியும் ஏற்படலாம்.
இவ்வருடம் நடைபெறும் இக்கிரகணத்தை முழுமையாக மட்டக்களப்பு நகரில் பார்க்க முடிந்தாலும் 2012 ஆண்டு நடைபெறும் கிரகணத்தை நாம் முழுமையாக மட்டக்களப்பில் பார்க்க இயலாது. கிரகணம் ஆரம்பமாகி ஓரிரு மணித்தியாலங்கள் சென்றிருக்கும் வேளையிலேயே அன்று மட்டக்களப்பில் சூரியன் உதிக்கின்றது. அடுத்த கிரகணம் 2012ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ம் திகதி மட்டக்களப்பு நேரப்படி அதிகாலை 04 மணி 12 நிமிடங்கள் 03 விநாடிகள் அளவில் ஆரம்பிக்கும். இதனைக் காண நாம் இன்னும் 8 வருடங்கள் காத்திருக்க வேண்டும். </span>

[b][size=18]