09-06-2004, 02:43 AM
இதில ரஷ்சிய அரசை முழுவதுமாக குற்றஞ்சாட்ட முடியாது...ரஷ்சிய படைகள் இராணுவ நடவடிக்கை பற்றி சிந்திக்க முதலே இரண்டு நாட்களாக தண்ணீரும் உணவும் இல்லாமல் வருந்திய சின்னதுகள் பயணயக் கைது நாடகத்தின் ஆரம்பத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் உடலை எடுக்கச் சென்ற மருத்துவ குழுவின் வரவோடு வெளியேற முற்பட அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்ல முற்பட்டதுடன் வெளியே காவலுக்கு நின்ற ரஷ்சியப் படைகள் மீது தாக்குதலும் நடத்தப்பட்ட பிந்தான் நிலமை மோசமாகப் போகிறது என்றதும் ரஷ்சியப் படைகள் சண்டையில் இறங்கியுள்ளன....! இந்தச் சம்பவத்தின் மூலம் செச்சினியா மீதும் அதன் போராளிகளின் நடவடிக்கைகளின் மீதும் இருந்த கொஞ்சநெஞ்ச உலக நல்லபிப்பிராயமும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது... அதுபோக முக்கோடு என்றாலே ஆடு மாடு போல மனிதரையும் கொன்று குவிக்கும் ஒரு வகை பயங்கரவாதிகள் என்று இன்று சர்வதேசத்துக்கும் காட்டியாயிற்று.... இது நீண்ட காலப் போக்கில் ரஷ்சியாவின் அடாவடித்தனக்கள் செச்னியாவில் பெருகவும் ரஷ்சியப் படைகள் செய்யும் மனித உரிமை மீறல்கள் உலகின் கண்களிற்கு நியாயப்படுத்தப்படவும் வாய்ப்பு அளிக்கப்பட்டாயிற்று....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

